India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய தொழிற்பழகுனர் திட்டத்தின் கீழ், அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, நீலகிரி மாவட்ட அளவில் தொழிற் பழகுனர்களுக்கான, ‘பிரதமரின் தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை’ முகாம் நடக்க உள்ளது. குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தனிநபர் மற்றும் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்தக் கடன் உதவியை, பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் நீலகிரி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்று கொள்ளலாம். பயனாளிகள் அரசின் இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக காகித பை தினத்தை முன்னிட்டு, நேற்று குன்னுார் அருகே அருவங்காடு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் சார்பில், ‘பிளாஸ்டிக்’ ஒழிப்பு மற்றும் காகித பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது. இதில், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக காகித பைகள் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், காகித பைகளால் சுற்றுச்சூழலுக்கான பயன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்கா சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்டுதோறும், 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில் வரும், செப்., முதல் நவம்பர் வரை இரண்டாவது சீசன் துவங்க உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். அதனை ஒட்டி பூங்காவை தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 1 தேர்வு இன்று நடைப்பெற்றது. இதில் தேர்வு எழுத 988 பேர் விண்ணப்பித்த நிலையில், 570 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மேலும், தேர்வு மையத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் ஆய்வு செய்தார்.

நீலகிரி உட்பட 12 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு எற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கூடலூர் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளதால் அதிக வனவிலங்குகள் காணப்படுகின்றன. சாலையோரங்களில் காட்டு யானைகள் நடமாடுவதை சுற்றுலா பயணிகள் கண்டு படம் எடுத்து மகிழ்கின்றனர். வனப்பகுதி சாலைகளில் வாகனங்களை நிறுத்தவோ, கீழே இறங்கவோ வேண்டாம் என்று வன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீலகிரி ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின்கீழ் செயல்படும் மேல்நிலை, நடுநிலை, தொடக்க பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யபடுகின்றன. தகுதி உள்ளவர்கள் ஜூலை 16-க்குள் ஆதிதிராவிடர், பழங்குடி நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அரங்கில் கூட்டுறவு பணியாளர் நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது . இதில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற 36 பணியாளர்கள் கோரிக்கை மனுக்களை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளனிடம் வழங்கினார்கள். இந்த மனுக்கள் இரண்டு மாத காலத்திற்குள் தீர்வு செய்யப்படும் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் தெரிவித்தார் .

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் ஜூலை 26ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாதவர்கள் தங்களது குறைகள் அடங்கிய விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் வருகின்ற 15ஆம் தேதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.