Thenilgiris

News July 16, 2024

நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இன்று கனமழை தொடர்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News July 16, 2024

16 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நேற்று (ஜூலை 15) நடைபெற்றது. இக்கூட்டத்தில், 16 பேருக்கு ரூ 2.52 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிதர்ஷினி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

News July 15, 2024

நீலகிரி அரசு கலைக்கல்லூரிக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்

image

நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி 1955ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்டது. பெரும் சவால்களுக்கு மத்தியிலேயே இந்த கல்லூரி உருவாவதற்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த கல்லூரிக்கு காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆவண காப்பகத்தின் இயக்குனர் வேணுகோபால் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

News July 15, 2024

நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 15, 2024

காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், மேலூர் ஊராட்சி, உட்லண்ட்ஸ் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் இன்று (ஜூலை) தொடங்கி வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவினை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் ஆகியோர் இருந்தனர்.

News July 15, 2024

திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

image

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இன்று திமுக உதகை நகர செயலாளர் ஜார்ஜ் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன், திமுக நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு. முபாரக், ரவிக்குமார், நெல்லை கண்ணன், எக்ஸ்போர்ட் செந்தில் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

கலைஞரின் கனவு இல்ல வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கல்

image

நீலகிரி மாவட்டம், குன்னூர் உட்லாண்ஸ் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.3.53 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவு ஆணைகளை இன்று வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

நீலகிரியில் ஆரஞ்சு அலர்ட்

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தின் அநேக இடங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் நீலகிரியில் கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடானது குறிப்பிடத்தக்கது.

News July 15, 2024

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

image

நீலகிரி குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மேலூர் உட்லண்ட்ஸ் அரசு நிதி உதவி பெறும் ஆரம்பப்பள்ளியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா, கூடுதல் ஆட்சியர் கௌஷிக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

News July 15, 2024

நீலகிரி ஆன்மீக தலைவருக்கு பாராட்டு

image

நீலகிரி மாவட்ட பாஜக ஆன்மீக பிரிவு துணை தலைவர் ஜே.கமல் அயோத்தியில் தங்கி 15 நாட்கள் ராமர் கோயிலில் சேவை செய்ததை பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டி கவுரவித்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த ‘சைவ பெரும் எழுச்சி விழா’வில் ஜே.கமலை ஆன்மீக தலைவர்கள் பாராட்டி கவுரவித்தனர். இதற்கு நீலகிரி மாவட்டம், மண்டல் உள்ளிட்ட பாஜகவினர் பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!