Thenilgiris

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு <>HRCE<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது, இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News July 17, 2024

நீலகிரி நீதிபதி மரணம்: யார் அந்த மர்ம ஆசாமி?

image

நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி. நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள சின்னம்பாளையத்தில் சாலையை கடக்க முயன்ற இவர் மீது அதிக வேகமாக வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நீதிபதி கருணாநிதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய மர்ம ஆசாமி நிற்காமல் விரைந்து சென்றார். இந்த விபத்து தற்செயலா, இல்லை திட்டமிட்டதா எனப் போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

News July 16, 2024

மக்கள் குறைகளைக் கேட்ட சுற்றுலா அமைச்சர்

image

தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ராமசந்திரன் தனது சொந்த தொகுதியான குன்னூரில் உள்ள சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் பெண்கள் உள்பட பலர் மனுக்களை கொடுத்தனர். அவற்றை பெற்ற அமைச்சர் துறை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

News July 16, 2024

வெறுச்சோடி காணப்படும் படகு இல்லம்

image

இயற்கை எழில் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதியை கொண்ட உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், குந்தா, கோத்தகிரி உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி காணப்படுகிறது. மேலும், உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி படகுகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.

News July 16, 2024

நீலகிரிக்கு புது கலெக்டர்

image

நீலகிரி ஆட்சியராக இருந்துவரும் மு.அருணா மாற்றப்பட்டுள்ளார். அவர் புதுக்கோட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், நீலகிரி மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையராக இருந்துவரும் லக்ஷ்மி பாவ்யா தன்னீரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

News July 16, 2024

நீலகிரியில் அதி கனமழை எச்சரிக்கை

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, இன்று நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கேற்றாவாறு பொதுமக்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீலகிரியில் இன்று காலை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News July 16, 2024

அவலாஞ்சி சுற்றுலா மையம் 2 நாட்களுக்கு மூடல்

image

இயற்கையில் சிறந்த அடர்ந்த வனப்பகுதியை கொண்ட உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டம் உதகை வருகை தரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் அவலாஞ்சி சுற்றுலா மையம் மையத்துக்கு நாள்தோறும் வருகை தருகின்றனர். இந்த நிலையில் தற்போது தொடர் மழையின் காரணமாக அவலாஞ்சி சுற்றுலா மையம் 2 நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

News July 16, 2024

நீலகிரியில் வேலை வாய்ப்பு: கலெக்டர் தகவல்

image

நீலகிரி ஆட்சியர் அருணா விடுத்துள்ள அறிவிப்பில், உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தனியார் துறை சார்பில் வருகிற 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்குபெற விரும்புபவர்கள் நேரிலோ அல்லது 0423-2444004 மற்றும் 7200019666 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்புகொண்டு பயன் பெறலாம் என அறிவித்துள்ளார்.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது

error: Content is protected !!