Thenilgiris

News July 17, 2024

நீலகிரி ஆட்சியராக பொறுப்பேற்ற பின் முதல் பேட்டி

image

நீலகிரி மாவட்ட புதிய ஆட்சி தலைவராக லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று (ஜூலை 17) பதவி ஏற்றதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், மழை தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என்றும், நீலகிரியின் கலெக்டராக பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பேசினார்.

News July 17, 2024

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜூலை 18) காலை 8.30 மணி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை காலை 8.30 மணி வரை கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 17, 2024

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட்

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 17) இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News July 17, 2024

நீலகிரி மாவட்ட புதிய ஆட்சியர் பதவி ஏற்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டு ஈரோடு வணிகவரி இணை ஆணையாளராக பதிவு வகித்த லக்‌ஷ்மி பாவ்யா டன்னீரு நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, இன்று (ஜூலை 17) பகல் 2 மணி அளவில் நீலகிரி மாவட்டத்தின் 116ஆவது ஆட்சியராக லக்‌ஷ்மி பாவ்யா தண்ணீரு பதவி ஏற்றுக் கொண்டார்.

News July 17, 2024

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலெர்ட்

image

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (ஜூலை 17) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை முதல் அதி கனமழைக்கு பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், உதகை உள்ளிட்ட இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 17, 2024

நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

நீலகிரி ஆட்சியர் அருணா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மக்களுடன் முதல்வர் திட்டம் ஜூலை 11ல் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக வரும் 19ம் தேதி உதகை அருகே தூனேரி சமுதாய கூடத்திலும், கூடலூர், மசினகுடி குழந்தை இயேசு தேவாலய அரங்கிலும், கோத்தகிரியில் கடினமலா புனித அந்தோனியார் மண்டபத்திலும் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற உள்ளது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 17, 2024

தேசிய கேரம் போட்டி கோத்தகிரி மாணவன் தேர்வு

image

கீழ்கோத்தகிரி அருகே அவ்வூர் பகுதியை சேர்ந்த மாணவன் ரெணோ. இவர் கோத்தகிரி ஐசிஎஸ் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் ரெணோ திருவண்ணாமலையில் நடந்த மாநில கேரம் போட்டியில் பங்கேற்று விளையாடி 3வது இடம் பிடித்து கான்பூரில் நடக்கும் தேசிய அளவிலான கேரம் போட்டியில் விளையாட தேர்வு பெற்றுள்ளதை பள்ளி நிர்வாகத்தினர் நேற்று பாராட்டினார்கள்.

News July 17, 2024

கனமழை: நீலகிரியில் தயார் நிலை

image

தொடர் மழையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில்ஊட்டி, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய நான்கு இடங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும தலா 10 பேர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 34 செமீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <>ஆன்லைனில்<<>> வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

நீலகிரியில் பானிபூரி விற்ற 9 கடைகளுக்கு அபராதம்

image

தமிழகம் முழுவதும் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை ஊட்டியில் மூன்று கடைகளிலும், குன்னுாரில் ஆறு கடைகளிலும் சுகாதாரமற்ற முறையில் பானி பூரி தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!