Thenilgiris

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தேனி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

News July 19, 2024

மத்திய அமைச்சர் இன்று முகாம் அலுவலகம் வருகை

image

நீலகிரி எம்பி தொகுதியின் முகாம் அலுவலகத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை 9.30 மணிக்கு வருகைபுரிவதாக நீலகிரி பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ் அறிவித்துள்ளார். காலை 10.30 முதல் 12 மணி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர் நீலகிரி எம்பி தொகுதிக்குட்பட்ட இடங்களில் மக்களைச் சந்திக்கிறார்.

News July 19, 2024

நீலகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்ய தன்னீரு அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News July 18, 2024

ஊட்டி மலை ரயில் பாதையில் மரம் சரிவு

image

நீலகிரியில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் லவ்டேல் ரயில் நிலையம் அருகே இருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு ரயில் பாதையின் குறுக்கே விழுந்தது. அதனால் ரயில் லவ்டேல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மேலும் மரத்தை வெட்டி அகற்ற 5 மணி நேரம் ஆகும் என்றதால், பயணிகளை பேருந்தில் ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ரயில் சேவை இன்று நிறுத்தப்பட்டது.

News July 18, 2024

நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

நீலகிரிக்கு தொடர்ந்து ரெட் அலர்ட்

image

நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கடும் கனமழை பெய்துவருகிறது. 21 சென்டிமீட்டர் மேலாக கனமழை பெய்து வருவதால் பலத்த மழை பெய்து வருவதால் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தற்போது ரெட் அலர்ட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 18, 2024

நீலகிரி மாவட்ட புதிய ஆட்சியருக்கு வரவேற்பு

image

நீலகிரி மாவட்ட புதிய ஆட்சியராக லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று பதவி ஏற்றார். அப்பொழுது நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட திட்ட குழு தலைவர் எம்.பொன்தோஸ் புதிய ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீருக்கு சால்வை  அணிவித்து மலர் கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

நீலகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்ய தன்னீரு அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

நீலகிரியில் மிக கனமழை

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!