India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அறிவுறுத்தலின்படி, கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் தனிப் படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக,பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள்,சந்தேகத்துக்குரிய நபர்கள், உள்ளூர், வெளியூர் வாகனங்களை வெடி குண்டு கண்டறியும் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <
கோத்தகிரியில் பாஜகவினர் பூத் வாரியாக மக்களவை வேட்பாளர் டாக்டர் எல்.முருகனுக்கு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இன்று (ஏப். 6) 54 வது பூத்துக்கு உட்பட்ட தர்மோனா பகுதியில் கிளை தலைவர் நடராஜ் தலைமையில் வாக்கு சேகரித்தனர். கோத்தகிரி நகர தலைவர் ஹால்தொரை , பிரதீஷ், தியாகராஜ், விக்ரம், சத்திய சிவன், சம்பத் உடன் சென்றனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
ஊட்டி அருகே கம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவருக்கு 6.5 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது. சிட்டாவில் பெயர் சேர்க்க விஏஓ கற்பகம் என்பவரை அணுகி உள்ளார். அவர் ரூ.6,000 லஞ்சம் கேட்கவே, ஜெய்கணேஷ் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார், பணம் கொடுக்கும்போது கையும் களவுமாக விஏஓ மற்றும் டிரைவர் ஆகிய 2 பேரை பிடித்து கைதுசெய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பணப்புழக்கம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், நீலகிரி தேர்தல் பறக்கும் படையினர் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தி வருகின்றனர். குன்னூர் தனியார் பள்ளிக்கு வந்து இறங்கிய ஹெலிகாப்டர் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. நேற்று ஹெலிகாப்டரை சுற்றி வளைத்து சோதனையில் ஈடுப்பட்டனர். சோதனையில் ஏதும் கிடைக்கவில்லை என்றனர்.
குன்னூர் புனித அந்தோணியார் தொழிற்பயிற்சி மையத்தில் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம் இன்று (5 தேதி ) நடைபெற்றது. முதல்வர் ஆனந்த் தலைமை தாங்கினார். சங்க தலைவர் மனோகரன் பேசும்போது
‘ ஓட்டுக்கு காசு வாங்குபவர்கள் சுயமரியாதையை இழக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் ‘ என்றார். கூட்டத்தில் அனைவரும் தேர்தலில் ஓட்டு போடுவதாக உறுதிமொழி ஏற்றனர்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு, ‘நாங்கள் இருக்கிறோம் பயப்படாமல் ஓட்டு போடுங்கள் ‘ என்பதை மக்களுக்கு வலியுறுத்தும் வகையில், கூடலூர் பஜாரில் நேற்று (ஏப். 4) போலீஸ் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. கூடலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்த குமார் தலைமை தாங்கினார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரி ஊட்டி தேர்தல் பிரச்சாரத்துக்கு (ஏப். 4) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார். குன்னூர் அருகே காட்டேரியில் இவரது வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனையில் ஒன்றும் கிடைக்காததால் அவரது வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. சோதனையின்போது கட்சி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.