India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவை நீலகிரி சிறு குறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் வழக்கறிஞர் ஜே பி சுப்பிரமணியம் நேற்று சந்தித்து மனு அளித்தார். அதில், “நீலகிரியில் உள்ள 65 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் பயனடையும் வகையில் பசுந்தேயிலை குறைந்தபட்ச விலை ஒரு கிலோவுக்கு ரூ.35 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். படுகர் சமுதாய மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வருகிற 31 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு 14-40 வயதுடைய 8 மற்றும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதில், பல்வேறு தொழற்பிரிவுகளுக்கு ஓராண்டு இராண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் மழையின் காரணமாக குடியிருப்புகள் சேதம் அடைந்து உள்ளதாகவும் கோரிக்கை மனுவை பலர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

கூடலூர், பிதர்காடு பாலவயல் பகுதி ஆற்றில் கவியரசன் என்ற சிறுவன் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடலை இன்று 3 வது நாளாக கூடலூர் தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 30 வீரர்கள் இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையில் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கோத்தகிரி, குன்னூர், குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்ய தன்னீரு அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கூடலூரில் கனமழையில் சேதம் அடைந்த பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதில் பாதிப்பு அடைந்தவர்களுக்கு நிவாரண பொருட்களுடன் ஆ. ராசா எம்பி தனது சொந்த செலவில் இருந்து ரூ. 5 ஆயிரம் நிதி உதவியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் முபாரக் மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.

தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக முதுமலை யானைகள் காப்பகம் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகரில் மேல்கூடலூர், கோக்கால் பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள இடங்களை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ . இராசா இன்று (ஜூலை 21) நேரில் சென்று பார்வையிட்டார். இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர் .

உதகை, அனுமாபுரம் பகுதியில் கூடலூரில் இருந்து வந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தின் மீது சற்று முன் மரம் விழுந்து பேருந்தின் முன்புறம் முற்றிலும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 74.3 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.