India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் இன்று(ஜூலை 24) 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் தயாரிக்கப்படும் ‘ஹோம் மேட் சாக்லேட்டுகளை’ சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். இங்கிருந்து மும்பை, பெங்களூரு, சென்னை, கோவை உட்பட பல்வேறு நகரங்களுக்கும் சாக்லேட்டுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் நட், ராக்ஸ், புரூட் அண்டு நட், ஒயிட் சாக்லேட்டுகள் மிகவும் பிரபலம். சர்க்கரை நோயாளிகளுக்காக சுகர் ஃபிரீ சாக்லேட்டுகளும் உள்ளன. இவை சுமார் ரூ.300 முதல் ரூ.3,500 வரை விற்பனையாகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, பந்தலூர், கூடலூர், ஊட்டி ஆகிய வட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழை பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மக்களவை திமுக கொறடா ஆ.ராசா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள நீலகிரி நிர்வாகம் தயாராக உள்ளது” என உறுதியளித்தார்.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் மேலும் 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ள நிலையில், நேரில் ஆஜராகுமாறு உதயன் மற்றும் தீபு ஆகியோர் ஜூலை 25ஆம் தேதியும், ஜம்ஷீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் ஜூலை 30ஆம் தேதியும் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பரவி 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், நீலகிரி மாவட்ட எல்லை சோதனை சாவடியில் சுகாதாரத்துறை சார்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்றவை இருக்கிறதா என பரிசோதனை செய்து, எந்தவொரு உடல் உபாதைகளும் இல்லாத பட்சத்தில் தான் மாவட்டத்திற்குள் அனுமதி வழங்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக நீலகிரியில் பெய்து வரும் மழையால், தேயிலை விளைச்சல் அதிகரித்து வருகிறது. அதேசமயம், தேயிலை பறிக்க தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பேட்டரி மூலம் இயங்கும் எந்திரம் மூலம் தேயிலை பறிப்பு பணியை விவசாயிகள் செய்து வருகின்றனர். இதன் மூலம், 200 கிலோ வரை தேயிலை பறிக்க முடிகிறது என்றும், கையில் பறித்தல் 50 கிலோ மட்டும் பறிக்க முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

பந்தலூர் பிதர்காடு பொன்னானி ஆற்றில் 20ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற கலையரசன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். அதை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி இன்று சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பிதிர்காடு சென்று கலையரசன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.3 இலட்சத்திற்கான காசோலை வழங்கினார். கூடலூர் RDO செந்தில் குமார் உடன் இருந்தார்.

உதகை, தமிழகம் மாளிகை அரங்கில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ் தலைமையில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் செயல்பாடுகள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, கூடுதல் ஆட்சியர் கௌஷிக்(வளர்ச்சி ) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இன்று(ஜூலை 23) 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அவலாஞ்சி பகுதியில் ரூ.24.57 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி.ஆ.ராசா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, குடியிருப்புகளை பார்வையிட்டனர்.
Sorry, no posts matched your criteria.