India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, தொடர்ந்து ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. அதைதொடர்ந்து, இன்றும் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி உதகை, குந்தா ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

உதகை நகர மத்திய காவல் நிலையம் இவ்வாண்டில் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்காக முதலமைச்சரின் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை பெற்றுக்கொண்ட உதகை மத்திய காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேலுவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தமிழகத்தில் இன்று(ஜூலை 25) 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் 13 அணைகள் உள்ளன. இதில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டங்கள் மூலம் 12 மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழையால் அணைகள் நீர்மட்டம் அதிகரித்து மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. நீலகிரியில் தற்போது 500 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடைபெறுவதாக குந்தா மின் உற்பத்தி அதிகாரி பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வௌவால் மற்றும் பன்றி ஆகியவற்றின் சிறுநீர், எச்சில் மற்றும் திரவங்கள் மூலமாக மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவுகிறது. இதனால், விலங்குகள் கடித்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள கூடாது; காடுகள் மற்றும் குகை பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோத்தகிரி அருகே கெச்சிகட்டி கிராமத்தைச் சேர்ந்த தீபக் என்பவரின் மகன் அக்குள் தீபக். இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், 15 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான கால்பந்து போட்டியில் விளையாடுவதற்காக கர்நாடகா அணிக்கு தேர்வு செய்யப்பட்டு நேற்று சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றார்.

நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டத்தில், தினசரி ஒரு கஞ்சா வழக்க பதியும் அளவுக்கு கைது நடவடிக்கைகள் இருந்தாலும் பயன்பாடு குறையவில்லை என கூறப்படுகிறது. இதன்படி, மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 120 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரியில் இன்று(ஜூலை 24) ஊட்டி, கூடலூர், குன்னூர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடந்த நாட்களில் பெய்த தென்மேற்கு பருவ மழையால் நீலகிரி மாவட்டத்தில் 98 வீடுகள் இடிந்து சேதம் அடைந்ததாக சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும், 140 இடங்களில் மரங்கள் விழுந்ததாகவும் அவர் கூறினார்.

கேரளாவை ஒட்டியுள்ள கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு, தாளூர் உள்ளிட்ட ஐந்து சோதனை சாவடிகளில் தமிழ்நாடு சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் தலா மூன்று பேர் வீதம் 15 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் அனைவருக்கும் காய்ச்சல், இருமல், சளி உள்ளனவா என பரிசோதித்த பின்பே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நிபா வைரஸ் பரவும் விதம் நோயின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாக செய்தி குறிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டார். கேரளா மாநிலம் மலப்புரத்தில் நிஃபா வைரஸ் காரணமாக 13 வயது சிறுவன் பலியான நிலையில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.