India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரியில் பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை பாதிப்புகளை எதிர்கொள்ள ஏதுவாக, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறையைச் சார்ந்த 450 பேர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கன மழை கொட்டி தீர்த்து வருகின்றனது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை நீலகிரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்லும்போது முன் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் நீலகிரி மக்களவை உறுப்பினர் மாஸ்டர் மாதன் இறுதி சடங்கு பாலாஜி நகர் இல்லத்தில் நடந்தது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும், நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன், ஆன்மீக துணை தலைவர் கமல் உள்பட திரளானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ தீவிரமடைந்து பலப்பகுதிகளில் மண்ணரிப்பு, மரம் சாய்ந்து விழுதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 7 முதல் 11 செமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்று சூழல் துறை மற்றும் தமிழக சுற்று சூழல் துறை சார்பில் தங்களது தாயார் பெயரில் மாணவர்கள் மரம் நடும் நிகழ்வு தொடங்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தலா 35 மரங்கள் பள்ளி வளாகத்தில் நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த நிகழ்வு ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் செய்து வருகிறார்.

நீலகிரி மக்களவை தொகுதியின் முதல் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மாதன்(92) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு கோவை பிரஸ் காலனியில் உள்ள பாலாஜி நகர் குடியிருப்பில் (27.7.24) இன்று நடைபெறுகிறது. இறுதி சடங்கில் பாஜகவினர், பொதுமக்கள் பங்கேற்கிறார்கள்.

தமிழகத்தில் இன்று(ஜூலை 26) 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றும் மழை பெய்ததால் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் அவர்களாகவே சவாரி செய்யும் துடுப்பு படகு மற்றும் மிதி படகு சவாரிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விசைப்படகுகள் மட்டும் வழக்கம்போல் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஊட்டியை சேர்ந்தவர் ராஜன் (வயது 50). அவர் மீது குன்னூரை சேர்ந்த நவீன் என்பவர் உதகை குற்ற தடுப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் இவர் 9 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.38 லட்சமும், வீடு புனரமைத்து தருவதாக 33 பேரிடம் ரூ.15.25 லட்சமும் மொத்தம் ரூ.53.28 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் ராஜனை கைது செய்து நேற்று ஊட்டி சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.