India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறும் 126வது மலர் காட்சி முன்னிட்டு சிறந்த பூங்காக்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான நுழைவு படிவங்கள் பூங்கா அலுவலகத்தில் 24ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. பூங்கா உரிமையாளர்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து 27ஆம் தேதிக்குள் பூங்கா பதிவு ஒன்றுக்கு ரூ.100 கட்டணத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.
திமுக தோல்வி பயத்தில் பெயர் பட்டியலிலிருந்து வாக்காளரின் பெயர்களை நீக்கியுள்ளது என நீலகிரி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழகம் + புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. திமுக vs பாஜக vs அதிமுக vs நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவியது.
ஆண்டுதோறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மே 1ஆம் தேதி காய்கறி கண்காட்சி நடத்துவது வழக்கம். நடப்பாண்டு லோக்சபா தேர்தல் காரணமாக காய்கறி கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துவருகிறது. வறட்சி காரணமாக கோத்தகிரி பூங்கா பசுமை இழந்து காணப்படுகிறது.
உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், மக்களவைப் பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை தேர்தல் பொதுப்பார்வையாளர் மஞ்சித் சிங் பரார், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருந்தார்.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் நீலகிரி சோதனைச் சாவடிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா வரும் பயணிகளிடம் பறவை காய்ச்சலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
உதகை , மசினகுடி இடையே கல்லட்டி மலைப்பாதை உள்ளது . செங்குத்தான சாலையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த சாலையில் அடிக்கடி வெளியூர் வாகனங்கள் விபத்து ஏற்படுகின்றன . மசினகுடியில் இருந்து இன்று (21 தேதி ) காலை 10 மணியளவில் உதகைக்கு வந்த சுற்றுலா வாகனம் சீகூர் பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்களும் ஏற்படவில்லை.
நீலகிரியில் மலை ரயில் பயணம் செய்ய உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகள் விரும்பி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காலையில் புறப்பட வேண்டிய ரயில் இன்ஜின் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகளுக்கு அவர்களது கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டது.. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அப்பர் பஜார் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (ஏப் 20) 9 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ வீட்டில் உள்ள பொருட்கள் மீது பற்றியதால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. விபத்தால் பகுதியே புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது தகவலின் பெயரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஏப் 21) ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் அத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும், வதைக்கூடங்களும் நாளை ஒரு நாள் முழுநேரம் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விதி மீறி செயல்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
கோத்தகிரி அருகே உள்ள சுண்டட்டி கிராமத்தை சுற்றி விவசாயிகள் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்துவருகிறார்கள். சமீபத்தில் யானைகள் தண்ணீர் தேடி இங்கு வந்தன. அதன்பின் யானை நடமாட்டம் தென்படவில்லை. இந்த நிலையில் நேற்று மீண்டும் யானை ஒன்று நடமாடியது மக்களை அச்சமடைய செய்தது. யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.