India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (45), வியாபாரி. இவர் தன்னுடைய காரில் 7 நண்பர்களுடன் நேற்று உதகைக்கு வந்தார்; தொடர்ந்து கூடலூர் சென்றார். அப்போது காமராஜர் அணை பகுதியில் உள்ள பாலத்தின் மீது சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரின் மீது மோதியது. அதில் பூபதி அதே இடத்தில் உயிரிழந்தார். மற்ற 7 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து உதகை போலீசார் விசாரிக்கின்றனர்.

வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக நீலகிரியில் இருந்து 10 மருத்துவர்கள் கொண்ட குழு வயநாட்டிற்கு சென்றுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேவைகளைக் கண்டறிந்து மனிதாபிமான முறையில் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு மக்கள் நல்வாழ்வுத் துறை செயல்படும் என்றும் கூறியுள்ளார்.

வயநாடு மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் நீலகிரியைச் சேர்ந்த இருவர் உட்பட 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கல் பகுதி பள்ளிவாசலில் முஸ்லியார் ஆக பணியாற்றிய சேரம்பாடி வன்னாத்தி வயல் பகுதியைச் சார்ந்த ஷியாபுதீன் பைசி என்பவரும் பலியானார். நீலகிரி மாவட்டத்தை சார்ந்த 3 பேர் நிலச்சரிவில் மரணமடைந்த செய்தி நீலகிரி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் ‘கிக் பாக்ஸிங் பிரிவில்’ கோவை தனியார் கல்லூரியில் பயின்று வரும் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த மாணவி ‘திவ்யா’ 60 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவி திவ்யாவுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.

கோத்தகிரி சிட்டிசன் நல சங்கத்தினர் இன்று (30.7.24) நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக பதவியேற்ற மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீருவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில், சிட்டிசன் நல சங்க தலைவர் ராஜ்குமார், பொதுச்செயலாளர் வக்கீல் பி.ஜே.முருகன், உறுப்பினர்கள் ரிக்கிராஜ், தாஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குன்னூர் – உதகை தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஓய்வெடுக்கும் வளர்ப்பு கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் சாலை விபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்நிலையில், சாலையில் சுற்றித் திரியும் வளர்ப்பு கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட துறையினர் அபராதம் விதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தை அடுத்த கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி கூடலூர் அடுத்த புளியம்பாறை பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பர் உயிரிழந்ததார். இந்நிலையில் தற்போது பந்தலூர் தாலூகா அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்த கல்யாண குமார் என்பவரும் உயிரிழந்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாயாறு அணையை தூர்வாரும் பணி கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தொடர்ந்து அணையின் தடுப்பு கதவுகள் சீரமைக்கப்பட்டது. மேலும், அணையின் மையப்பகுதியில் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி 2 வாரங்களுக்குள் நிறைவு பெரும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணை தூர்வாரப்படுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உதகை, குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருந்தது. இதனால் தேலை மகசூல் அதிகரித்துள்ளது. தேயிலை செடிகளில் பசுமையாக கொழுந்துகள் வளர்ச்சி இருந்தது. நல்ல மகசூல் ஈட்டும் நோக்கில் விவசாயிகள் தேயிலை செடிகளுக்கு உரமிட்டு பராமரித்தனர். உதகை, சோலூர், மஞ்சூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. மகசூல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கேரள மாநிலம் மேப்பாடி பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, புளியம்பாறை பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவரது உடல் தற்போது விம்ஸ் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இவர் உயிரிழந்ததை அறிந்த புளியம்பாறை பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.