India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி ஆட்சியர் லட்சுமி திவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குன்னூர் வட்டத்தில் 19,332 பேர், கூடலூரில் 22,950 பேர், கோத்தகிரியில் 16,263 பேர், குந்தாவில் 6,718 பேர், பந்தலூரில் 20,019 பேர், உதகையில் 27,468 என மொத்தம் 1,12,750 மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கூடலூர் மற்றும் குன்னூர் வியாபாரிகள் சங்கம், கூடலூர் ரோட்டரி வேலி சங்கம் சார்பில் மளிகை பொருட்கள், காய்கறி, பாய் மற்றும் போர்வைகள் என மொத்தம் 14 டன் நிவாரண பொருட்களை 3 லாரிகளில் நேற்று எடுத்து செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மேலும், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடும் வகையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 32 பேர் நேற்று (01.08.24) மாலை உதகைக்கு வந்தடைந்துள்ளனர் .

நீலகிரி மாவட்டத்தில் பைக்காரா மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்களில் 32 பிரிவுகளில் 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நீலகிரிக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக
3 மதகுகளில், வினாடிக்கு 100 கன அடி வீதம், 300 கன அடி நீர் தினமும் திறக்கப்பட்டு வருகிறது.

கனமழை காரணமாக அடர்லி – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு பாறாங்கற்கள், மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான ரயில் சேவை நேற்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு 10.22 மணியளவில் சேலம் ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் வரும் 6ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான ரயில் போக்குவரத்து வரும் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஹில்கிரோ – ஆர்டர்லி இடையே ரயில் நிலையம் இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அப்குதியில் உள்ள தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் அத்தியாவசிய பொருள்கள் நேற்று சேகரிக்கப்பட்டன. இந்த நிவாரண பொருள்கள் கல்பெட்டா என்ற இடத்தில் அரசு முகாமில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்தியில், மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி ஆக.21ம் தேதி ஊட்டி எச்.ஏ.டி.பி. திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நடக்கிறது. அதில் 14, 16, 18, 20 வயதிற்கு உட்பட்ட ஆண் – பெண் இருபாலரும் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் – 94430 66112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே கலெக்டர் லட்சுமி பாவ்யா தன்னீரு, கனமழையால் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

நீலகிரி குன்னூரை அடுத்த கரன்சி எஸ்டேட் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் என்பவரது மகள் கவுசல்யா (26).இவர் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சூரமலையை சேர்ந்த விஜீஸ் குட்டன் (36) என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவனுடன் சூரமலையில் வசித்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கணவன் குழந்தையுடன் மூவரும் நேற்று உயிரிழந்தனர்.
Sorry, no posts matched your criteria.