Thenilgiris

News August 3, 2024

நீலகிரி: மாணவர்களுக்கு ரூ.28 கோடி கல்விக் கடன்

image

உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி கல்விக் கடன் வழங்குவது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், நீலகிரி மாவட்டத்தில் 2024-2025 கல்வியாண்டில் 2,000 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 28 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கல்விக் கடன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

News August 3, 2024

நீலகிரி: கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் கனமழை காரணமாக 7 வீடுகளின் கட்டடங்கள் விரிசல் ஏற்பட்டு மண்ணில் புதைந்து வருகிறது. இந்நிலையில், இந்திய மண்ணியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இணைந்து கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.

News August 3, 2024

நீலகிரியில் பூண்டு அறுவடை அமோகம் 

image

நீலகிரியில் உள்ள எம்.பாலாடா, ஓர நள்ளி, கொல்லி மலை, கடநாடு, கட்டபெட்டு, பில்லி கம்பை, பன ஹட்டி, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளை பூண்டுகளை பயிரிட்ட விவசாயிகள், அதனை அறுவடை செய்து மேட்டுபாளையம் மற்றும் ஊட்டி மண்டிகளுக்கு அனுப்புவதில் வேகம் காட்டி வருகின்றனர்.

News August 3, 2024

நீலகிரி பெண் செவிலியருக்கு குவியும் பாராட்டு

image

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு பகுதியில் காட்டாற்று வெள்ளம் காரணமாக எதிர் திசையில் உள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பெண் செவிலியர் சபீனா என்பவர் ராணுவத்தினர் அமைத்த ஜிப்லைனில் தொங்கியபடி அப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார். இவரின் செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

News August 2, 2024

நீலகிரி ஆட்சியர் எச்சரிக்கை

image

வயநாடு  நிலச்சரிவு போன்று நீலகிரியில் ஏற்பட உள்ளது என்று சமூக வலை தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பி வருகிற நபர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த பொய்யான செய்திகளை பொதுமக்கள் நம்பி அச்சம் அடைய வேண்டாம் . மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்தார்.

News August 2, 2024

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை: உதவி எண்கள் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் மாவட்ட காவல்துறை சார்பாக கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி ஆட்சியர் அலுவலகம் 1077, காவல்துறை கட்டுப்பாட்டு அறை 0423 2444111-ல் தொடர்பு கொள்ளலாம். மேலும், தனிப்பிரிவு அலுவலகம் 9498101260, 9789800100 ஆகிய எண்களையும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News August 2, 2024

‘நீலகிரியில் நிலச்சரிவு என்பது வதந்தி’

image

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் இந்த தகவல் தவறானது; வதந்தி என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னீரு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் அவர், இது குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்யும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார். தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.

News August 2, 2024

சைக்கிள் பந்தையத்தில் வென்ற நீலகிரி மாணவன் 

image

உதகை ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் டிப்ளோமா இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் எஸ். ஹகமது. இவர் திருச்சியில் நடைபெற்ற 200 கி.மீ. தொலை தூர சைக்கிள் ஓட்டும் பந்தையத்தில் இரண்டாவதாக வெற்றி பெற்றார். இந்நிலையில் மாணவர் எஸ். ஹகமதுவை ஜே.எஸ்.எஸ். கல்லூரி முதல்வர் தனபால் வாழ்த்தி பாராட்டினார். அப்போது, நிர்வாக அலுவலர் பசுவண்ண தேவரூ , உடற்கல்வி  இயக்குநர் சிவபிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

News August 2, 2024

உதகையில் பருவமழை ஆய்வு கூட்டம்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில்   தென்மேற்கு பருவமழை முன்னிட்டு மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது . மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / பிற்பட்டோர் நல துறை செயலாளர் எஸ்.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார். மேலும், மாவட்ட கூடுதல் ஆட்சியர் கௌசிக் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

News August 2, 2024

உதகை: சவுக்கு சங்கருக்கு எதிராக இடையீட்டு மனு

image

உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் ஆய்வாளர் அல்லிராணி தரப்பு வழக்கறிஞர் சவுக்கு சங்கருக்கு எதிராக இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று (ஆகஸ்டு 2) விசாரணைக்கு எடுத்து கொள்வதாக கூறி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.

error: Content is protected !!