India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 17 வாகனங்கள் வரும் நவம்பர் 1ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா தெரிவித்துள்ளார். 6 ஆறு சக்கர வாகனங்கள், 6 நான்கு சக்கர வாகனங்கள், 2 இரு சக்கர வாகனங்கள் உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் 31ஆம் தேதி மாலை 5 மணி வரை பார்வையிடலாம்.மேலும் விபரங்களுக்கு 9486188599, 7010701635-ஐ அணுகவும்.

நீலகிரி மக்களே, மத்திய அரசின் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 12ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 19,900 முதல் ரூ.63.200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவகள் வரும், 23ம் தேதிக்குள் <

நீலகிரியில் மழை பாதிப்புகள் குறித்த புகார் எண்கள்:
1)ஊட்டி கோட்டம்: 0423-2445577
2)குன்னூர் கோட்டம்: 0423- 2206002
3)கூடலூர் கோட்டம்: 04262-261295
4) ஊட்டி வட்டம்: 0423-2442433
5)குன்னூர் வட்டம்: 0423-2206102
6)கோத்தகிரி வட்டம்: 04266-271718
7)குந்தா வட்டம்: 0423-2508123
8)கூடலூர்: 0423-261252
9)பந்தலூர்: 04262-220734

நீலகிரி மக்களே, மத்திய அரசின் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 12ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 19,900 முதல் ரூ.63.200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவகள் வரும், 23ம் தேதிக்குள் <

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

கோத்தகிரி அருகே, கிராமப்பகுதியை ஒட்டிய கம்பிகல்லு தேயிலை தோட்டத்தில் கடந்த சில நாட்களாக, புலி நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால், விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட, பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். வனத்துறையினர், புலி நடமாட்டத்தை உறுதி செய்து, மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர். மேலும் வனத்துறையினர் புலி நடமாட்டம் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கட்டப்பட்டு வனச்சரகம், தீனட்டி செல்லும் சாலையின் அருகே உள்ள எஸ்டேட்டுக்கு சொந்தமான இடத்தில், சோலார் மின்வேலி கம்பியில் கரடி ஒன்று சிக்கி இறந்ததாக, வனத்துறைக்கு தகவல் வந்தது. உடல் உறுப்பு மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. அதன் பின் கரடி உடல் எரியூட்டப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணைக்கு பின், கரடிக்கு சுருக்கு வைத்த, விக்ரம்குமார் என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டத்தின் உதகை நகரம், உதகை ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் பகுதிகளில் இன்று இரவு காவல்துறை ரோந்து நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களது மொபைல் எண்கள் மாவட்ட காவல்துறை அலுவலகம் மூலம் பொதுமக்கள் வசதிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி ஆதரவு, வளர்ப்பு பராமரிப்பு பிற்காப்பு பராமரிப்பு, பிரதமர் மற்றும் முதலமைச்சரின் கோவிட்-19 நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பயனடைந்து வரும் குழந்தைகளுடனான கலந்துரையாடல், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு 268 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்கும் அடையாளமாக இன்று 54 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கினார். இதில் உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.