Thenilgiris

News August 4, 2024

நீலகிரி மாவட்டத்தில் இன்று மழை பெய்யக்கூடும்

image

தமிழகத்தில் இன்று (ஆக.04) இரவு 7 மணி வரை 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் முதன்முறையாக!

image

கோவை மேட்டுப்பாளையத்தில், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் முதன்முறையாக பூண்டு ஏலம் துவங்கியது. சங்கம் துவங்கபட்ட 1935-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்குகளை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து நீலகிரி விவசாயிகள் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் இன்று முதல் இச்சங்கத்தில் ஊட்டி மலை பூண்டு ஏலம் துவங்கியது.

News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டம்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஏனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள 217640 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இந்த மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

News August 4, 2024

நட்புன்னா என்னான்னு தெரியுமா?

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீலகிரி சொந்தங்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

உததை பைக்காரா படகு இல்லம் இன்று முதல் திறப்பு

image

கூடலூர் சாலையில் 22 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதிக்கு மத்தியில் பைக்காரா அணை உள்ளது.
இது கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. சாலை பணிக்காக மூடப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம் இன்று மூதல் மீண்டும் திறக்கப்படுவதாக சுற்றுலா துறை அறிவித்துள்ளது. இது சுற்றுலா பயணிகள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News August 4, 2024

வயநாடுக்கு சென்ற நிவராண பொருட்கள்

image

கூடலுர் ஒசூர் வனத்துறை சார்பில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு அமைப்பினர் நிவாரணஉதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கூடலுர் ஒசூர் வனத்துறை சார்பில் நேற்று, ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு தலைமையில் அனுப்பிவைக்கப்பட்டது.

News August 3, 2024

ஊட்டிக்கு புதிய ஆணையர் நியமனம்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் பணி புரிந்து வந்த ஆணையர் எகராஜ் தேனி மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றதை அடுத்து புதிய ஆணையர் நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட ஜஹாங்கிர் பாஷா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். இவரை நகராட்சி அலுவலர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News August 3, 2024

நீலகிரிக்கு உதவி எண்கள் அறிவிப்பு

image

நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மழைபாதிப்புக்கு 24 மணிநேரமும் செயல்படும் 0423-2444111, 9498101206, 9789800199 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறையினர் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலம் தெரிவித்துள்ளனர்.

News August 3, 2024

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 05.08.2024 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 3, 2024

தயார் நிலையில் மீட்பு குழுவினர் – நீலகிரி எஸ்பி தகவல் 

image

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், பருவ மழை பாதிப்பை எதிர் கொள்ளும் வகையில், ஒவ்வொரு உட்கோட்டங்களிலும் பயிற்சி பெற்ற 10 பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் எந்த நேரத்திலும் 0423 2444111 என்ற எண்ணை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!