India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூவை, படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர் மற்றும் பாலகொலா ஊராட்சித் துணைத் தலைவர் மஞ்சை வி.மோகன், பாடுகதேச கட்சித் துணைத் தலைவர்கள் ஆனந்த், பூபதி, கண்ணன் மற்றும் மகாலிங்கன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து வெண்மை சால்வை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடந்தது. அப்போது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 20 சுகாதார மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

நீலகிரி முன்னாள் எம்பி மாஸ்டர் மாதன் கடந்த ஜூலை 27ல் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், ஊட்டி இளம் படுகர் சங்கம் அரங்கில் நாளை மதியம் 2.30 மணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர் வயல் கவள என்ற பகுதியில் அங்கு இன்று அதிகாலை நேரத்தில் காட்டு யானை ஒரு சூப்பர் மார்க்கெட்டின் ஷெட்டரை உடைத்தது. இது அப்பகுதியினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு தொடர்ந்து 4 மாதமாக யானைகளின் அட்டாகாசம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பலமுறை வனத்துறைக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உங்கள் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதா?

ஊட்டி அருகே பைக்காரா அணையில் படகு சவாரி செய்த பிறகு சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று கூறுகையில், ‘பைக்காராவில் 26 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தற்போது, 5 இருக்கைகள் கொண்ட ஒரு உல்லாச படகு மற்றும் 2 வாட்டர் ஸ்கூட்டர்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிட்டார்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 6வது நினைவு நாள் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி அன்று காலை 11:30 மணி அளவில் நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் நினைவஞ்சலி நடைபெறுகிறது என
நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் திமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு முன்னிலையில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர் ஆகிய ஆறு தாலுகாவுக்குட்பட்ட மக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

உதகையில் இளம்படுகர் சங்க அரங்கில் மறைந்த முன்னாள் பாஜக எம்.பி. மாஸ்டர் மாதன் அவர்களுக்கு இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குண்டன், சாந்தி ராமு, உதகை தொகுதி எம்.எல்.ஏ.கணேஷ், நான்கு சீமைகளின் தலைவர்கள் பங்கேற்று மாஸ்டர் மாதன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இடையிடையே 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் யானைகள் வசிக்கும் 8,989.63 சதுர கி.மீ. பரப்பளவில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் சராசரி அளவாக 3,063 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் வசிக்கும் யானையின் அடர்த்தியின் அளவு 0.34 என்று கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் 2,253 யானைகள் வாழ்கின்றன.
Sorry, no posts matched your criteria.