Thenilgiris

News August 7, 2024

நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News August 7, 2024

நீலகிரியில் ஹெச்.ராஜா பேட்டி

image

பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா நேற்று மாலை ஊட்டி YBA அரங்கில் பேசுகையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 131 கொலைகள் நடை பெற்றுள்ளன என குறிப்பிட்டார். இதில் மாநில பொதுச்செயலர் முருகானந்தம், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News August 7, 2024

BREAKING: நீலகிரியில் யானை மரணம்!

image

நீலகிரி மாவட்டம், ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட வடவயல் பகுதியில் விவசாயம் நடத்தி வரும் பாலகிருஷ்ணன் என்பவரின் பட்டா நிலத்தில் காட்டு யானை ஒன்று சேற்றில் சிக்கி மரணம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் யானை மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 7, 2024

நீலகிரியில் புவியியல் துறை 20 நாள் ஆய்வு

image

நீலகிரியில் கனமழையால் கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் வீடுகள், முதியோர் இல்ல கட்டடம், சாலை போன்றவற்றில் வெடிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இந்த நிலையில் மத்திய புவியியல் துறை 2 அதிகாரிகள் சென்னையில் இருந்து நேற்று மாலை கூடலூர் வந்தனர். பின்னர் இன்று முதல் 20 நாட்கள் ஆய்வு பணி நடைபெறும் என தெரிவித்தனர்.

News August 7, 2024

நீலகிரியை நவீனமாக்குதல்: அமைச்சர் ஆலோசனை

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை அபிவிருத்தி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் சுற்றுலா அமைச்சர் ராமசந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் சுற்றுலா மையங்களை நவீனமாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறையின் அரசு முதன்மை செயலர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

News August 7, 2024

BREAKING ஊட்டி ரயில் சேவையில் திடீர் திருப்பம்!

image

கனமழையால் ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஊட்டி – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை கடந்த 1ஆம் தேதிமுதல் நேற்று (ஆக.6) வரை ரத்துசெய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் விடுத்த செய்தி குறிப்பில் வரும் ஆக.15ம் தேதி வரை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்றுமுதல் மலை ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுவதாக சற்றுநேரத்தில் மாற்றி அறிவித்தது. ஷேர் பண்ணுங்க!

News August 6, 2024

நீலகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நீலகிரி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 16.08.2024 அன்று நடைபெறவுள்ளது. இதற்காக கூடுதல் ஆட்சியர் வளாகம் பகுதியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அணுகலாம். அல்லது 0423-2444004, 7200019666 என்ற எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணிவரை 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிவரை, இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2024

BREAKING நீலகிரியில் தேர்தல்: புதிய தலைவர் தேர்வு

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர்மன்றத் தலைவர் பதவி காலியாக இருந்தது. இதில் 16வது வார்டு கவுன்சிலர் சுசிலா போட்டியிடுவார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று இந்தப் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் சுசிலா போட்டியின்றி ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். மக்களே உங்கள் கருத்து என்ன?

News August 6, 2024

கூடலூரில் வாழ்வதா? சாவதா? மக்கள் ஆர்ப்பாட்டம்

image

கூடலூர், சேரம்பாடி சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் தொந்தரவுகள் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் கொடுத்தும் பயன் இல்லை என்பதால் வாழ்வதா? சாவதா? என்ற பதாகைகளை ஏந்தி நேற்று கூடலூர் சுற்றுவட்டார மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!