India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி முகாமுக்கு, ஜெர்மன் விமானப்படை முதன்மை தளபதி லெப்டினன்ட் கர்னல் இங்கோ கெர் ஹார்ட்ஸ் தலைமையில், 15 பேர் கொண்ட குழுவினர் இன்று மலை ரயிலில் குன்னூர் வந்தனர். அவர்களை ராணுவத்தினர் மற்றும் சுற்றுலாத் துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், பலத்த பாதுகாப்புடன் சாலை வழியாக குன்னூர் ராணுவ கல்லூரிக்கு அவர்களை அழைத்து சென்றனர்.

நீலகிரி பத்திரிக்கையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று உதகை ஜிம் பார்க் ஓட்டலில் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவராக ஆண்டனி, செயலாளராக சரவணன் (பாபு), பொருளாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், பத்திரிகையாளர்களின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிதாக பதவியேற்றோருக்கு, நீலகிரி பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கான திட்டத்தின்கீழ், 10 பேர் கொண்ட குழுவாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஊட்டி பிங்கர் போஸ்ட், ஆட்சியர் கூடுதல் கட்டடத்தில் செயல்படும், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. நீலகிரியில் வீடுகள் மண்ணில் புதைகின்றன; இதனை புவியியல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்துவருகின்றன. இந்த நிலையில் நீலகிரிக்கு கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கூடலூர் ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து முதுமலை கால்நடை டாக்டர்கள் ராஜேஷ் குமார் மற்றும் சுகுமாரன் ஆகியோர் யானை உடலை பரிசோதித்து மின்சாரம் தாக்கி பலியானதை உறுதி செய்தனர். இதையடுத்து தலைமறைவான தோட்ட உரிமையாளரை வனத்துறை தேடி வருகிறது.

உதகையில் நீலகிரி மாவட்ட பாஜக கூட்டம் மாவட்ட தலைவர் மோகன் ராஜ் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பார்வையாளராக பங்கேற்றனர். கூட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஊட்டி புறநகர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் நகரில் உள்ள ஒரு கடையில் பணி முடித்து மாலை வழக்கம்போல் வீடு திரும்பி உள்ளார். அப்போது மரவியல் பூங்கா அருகே நின்ற வாலிபர்கள் இவரை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி உள்ளனர். அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கும்பலை வலை வீசி தேடி வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டம் உதகை கூட்ஸ்ஷெட் சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகள் உள்ளன. நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னீரு நேற்று கிடங்குகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, தரம், எடை ஆகியவற்றை சோதனை நடத்தினார். அப்போது அவருடன் அதிகாரிகள் இருந்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கூடலூர், பந்தலூர், சேரம்பாடி, குந்தா, மஞ்சூர், பந்தலூர் உட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் சங்கம் தமிழக வியாபாரிகள் சங்க பேரமைப்புடன் இணைக்கப்பட்டது. இந்த பேரமைப்பின் நடப்பாண்டுக்கான ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு விழா நாளை காலை 11 மணி அளவில் உதகை பிங்கர் போஸ்டில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்யும் வகையில், புதிதாக கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இது கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நேரில் சென்று கட்டுமான பணிகளை ஆய்வு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.