India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உதகை அரசு கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசிய கொடி ஏற்றி வைத்து காவலர் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 15 பயனாளிகளுக்கு ரூ.25.56 இலட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா , கூடுதல் ஆட்சியர் கௌஷிக் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூடலூர் அருகே அத்திபாளி பகுதியில் தனியார் தோட்டத்தில் 7 வயது பெண் சிறுத்தை இறந்து கிடப்பதாக நேற்று வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு சென்று ஆய்வு செய்தார். பின்னர், கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் பிரேத பரிசோதனை செய்தார். இறந்ததற்கான காரணம் ஆய்வக அறிக்கை வந்த பிறகே தெரிய வரும் என்றனர்.

நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த சுந்தரவடிவேலு மாற்றலாகி சென்னை சென்றார். அவருக்கு பதிலாக நீலகிரி காவல் கண்காணிப்பாளராக நிஷா இன்று பதவி ஏற்றார். பின்னர் அவர் கூறுகையில், ‘நீலகிரி மாவட்ட எல்லையில் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் இணைவதால் பாதுகாப்பு கருதி சோதனை சாவடிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரமாக்கப்படும்’ என்றார்.

நீலகிரி பஞ்சாயத்துகளில் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

கோவையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று(14.8.24) பொறுப்பேற்று கொண்டார். மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி பணியிட மாறுதலில் சென்றார். இதையடுத்து புதிய மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.