India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த செவிலியர் ஆ. சபீனா அவர்களுக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்களிடம் சபீனா நேரில் வாழ்த்து பெற்றார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கூட்டாடா அருகே கோவில் மட்டம் பகுதியில் அரசு பேருந்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசிய விபத்தில், பேருந்து ஓட்டுனர் பிரதாப் (42) உயிரிழந்தார். இந்நிலையில், பிரதாப் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்க உத்திரவிட்டுள்ளார்.

கக்குச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளது தீனட்டி கிராமம். அழகு நிறைந்த இந்த கிராமத்தில் சைவ உணவை மட்டுமே கிராம மக்கள் காலம் காலமாக சாப்பிட்டு வருகின்றனர். அசைவ உணவுகளை முற்றிலும் புறக்கணித்து வருவதாகவும் கூறுகின்றனர். பழங்காலம் முதல் இன்றுவரை கிராமத்தில் உள்ள இளைஞர்களும் சைவ உணவு முறையை மட்டுமே கடைப்பிடித்து வருகிறார்களாம்.

ஊட்டியில் நடிகர் சூர்யா படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிக்க ரஷ்யாவில் இருந்து 115 பேர் உதகை ஓட்டலில் தங்கியுள்ளனர். சுற்றுலா விசாவில் வந்து படத்தில் நடிக்க கூடாது என்பதாலும், அவர்கள் பற்றி போலீசுக்கு தெரிவிக்காதது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட தனிபிரிவு போலீசார் தங்கும் விடுதிக்கு நோட்டீஸ் வழங்கி, விசாரித்து வருகின்றனர்.

நீலகிரியில் கடந்த 42 மாதங்களில் 2958 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி விவரம் தமிழகத்தில் குறைந்தபட்ச கருக்கலைப்பு விவரமாகும்.

நீலகிரி மாவட்டத்தின் ஒருசில இடங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிக கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் தெரிகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கோதகிரியில் தாழ்வாக இருந்த உயர் மின்கம்பியில் உரசி அரசு பேருந்து ஓடுநர் உயிரிழப்பு. உதகையில் தாழ்வாக உயர் மின்அழுத்த கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. அதிக மேகமூட்டம் காரணமாக கீழ் இருந்த மின்கம்பி தெரியாமல் இருந்ததால் அதின் மேல் நின்ற ஓட்டுநர் மீது மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டு பலியாகினார்.

வார விடுமுறையை முன்னிட்டு ஊட்டி வரும் உல்லாச பயணிகளை குஷி படுத்தும் வகையில் வார இறுதி நாட்களில் மலை ரயில் இயக்கபடுகிறது. இந்த வகையில் (16 ம் தேதி, 17ம் தேதி) ஆகிய தேதிகளிலும், வருகிற (25ம் தேதியும்) ஆக 3 நாட்கள் குன்னூர் – ஊட்டி இடையே சிறப்பு ரயில் இயக்க படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க.

வயநாடு நிலச்சரிவில் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றை கடந்து அடுத்த பக்கத்தில் உள்ளவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது நீலகிரியை சேர்ந்த செவிலியர் சபினா, மரத்தில் கயிற்றை கட்டி அதை பிடித்தபடி சென்று சிகிச்சை அளித்தார். இதை பாராட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் இவருக்கு கல்பனா சாவ்லா விருது மற்றும் ரூ.5 லட்சம் காசோலையை இன்று வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.