Thenilgiris

News August 18, 2024

குன்னூர் அருகே விபத்து

image

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி முனிஸ்வரன் கோவில் அருகே குன்னூரில் இருந்து சென்ற கார். சாலையில் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது நல்வாய்ப்பாக வாகனத்தில் பயணித்த நபர்கள் இருவருக்கும் எந்த காயங்கள் இன்றி மீட்கப்பட்டனர் குன்னூர் நகர காவல் துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

News August 18, 2024

நீலகிரி மாவட்ட எஸ்.பி திடீர் விசிட்

image

நீலகிரி: ஊட்டி அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நீலகிரி எஸ்.பி., நிஷா ஆய்வு மேற்கொண்டார். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சசம்பவத்தின் எதிரொலியாக சேட் அரசு தலைமை மகப்பேறு மருத்துவமனையில் நீலகிரி மாவட்ட எஸ்.பி.,  என்.எஸ். நிஷா நேரில் ஆய்வு செய்தார்.

News August 18, 2024

நீலகிரி: காவல்துறை போக்குவரத்து விழிப்புணர்வு

image

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா உத்திரவுப்படி இன்று போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் இருசக்கர வாகன ஓட்டுநர்களிடம் தலைக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News August 18, 2024

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2024

நீலகிரி: ரன்னிமேடு ரயில் நிலையம் திறக்கப்படுமா?

image

மேட்டுப்பாளையம் – குன்னூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது ரன்னிமேடு ரயில் நிலையம். ஆனால் இந்த ரயில் நிலையம் தற்போது செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில், சோலை நடுவே அமைந்துள்ள ரன்னிமேடு ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று, நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை குழுவினர் நேற்று ரயில்வே வாரிய ஹெரிடேஜ் செயல் இயக்குநர் ஆஷிமா மெஹரோத்ராவிடம் வலியுறுத்தினர்.

News August 18, 2024

நீலகிரி: தகவல் தர தவறினால் கடும் நடவடிக்கை

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடிகர் சூர்யா பட படப்பிடிப்பிற்காக, ரஷ்ய நடிகர்கள் தங்கிய விவரம் தெரிவிக்காத விடுதியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, வெளிநாட்டவர் தங்கும் விவரங்களை போலீசுக்கு தெரிவிக்காத ஓட்டல் நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

News August 18, 2024

நீலகிரி: ஆக்கிரமிப்பை அகற்றி வன நிலம் மீட்பு

image

நீலகிரி: பந்தலூர் அருகே பாட்டவயல் சோதனை சாவடி அருகே வன நிலத்தை சந்தோஷ் என்பவர் ஆக்கிரமித்து ஓட்டல் கட்டி நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வன நிலத்தில் கட்டிடம் கட்டியது தவறு என்றும், அதை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் பேரில், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, அதிகாரிகளுடன் நேற்று சென்று ஆக்கிரமிப்புக் கடையை அகற்றினர்.

News August 18, 2024

நீலகிரி: தேயிலை தோட்டத்தில் பதுங்கிய மலைப்பாம்பு!

image

குன்னூர் அருகே கொலக்கம்பை கோட்டக்கல் எஸ்டேட் உள்ளது. அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதாக தொழிலாளர்கள் நேற்று வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து, கொலக்கம்பை அருகே அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

News August 17, 2024

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News August 17, 2024

நீலகிரியில் சூர்யா படப்பிடிப்பு: ரஷ்யர்கள் வெளியேற்றம்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்து வரும் நடிகர் சூர்யா படப்பிடிப்பில் நடிப்பதற்காக, 115 ரஷ்யா துணை நடிகர்கள் வந்து தங்கி இருந்தனர். இவர்கள் குறித்து விடுதி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால், எஸ்பி அலுவலகத்திற்கு முறையான தகவல் கொடுக்காததைக் குறித்து விளக்கம் அளிக்குமாறு போலீசார் விடுதிக்கு நோட்டீஸ் வழங்கினர். இதைத் தொடர்ந்து நேற்று ரஷ்ய நடிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.

error: Content is protected !!