Thenilgiris

News August 20, 2024

நீலகிரியில் அரசு வேலை: தேர்வானவர்கள் விவரம்

image

நீலகிரி தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. கரூர் தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 62 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வானவர்கள் விவரங்கள்

News August 20, 2024

தொட்டபெட்டா காட்சிமுனை 3 நாட்கள் மூடல்

image

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை இன்று (20.08.2024) முதல் 3 நாட்கள் மூடப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொட்டபெட்டா செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2024

நீலகிரியில் 15 பகுதி நேர ரேஷன் கடைகள்

image

நீலகிரி மாவட்டம், ஊட்டி பகுதியில் 6 புதிய பகுதி நேர ரேஷன் கடைகளும், கூடலூரில் 2 கடைகளும், குன்னூர் பகுதியில் 7 கடைகளும் என மொத்தம் 15 பகுதி நேர நியாய கடைகள் திறக்கப்பட உள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று குன்னூரில் தெரிவித்தார். அப்போது மாவட்ட கூடுதல் ஆட்சியர் கவுசிக் உடனிருந்தார்.

News August 20, 2024

தொட்டபெட்டா செல்ல 3 நாட்களுக்கு தடை

image

ஊட்டியில் தொடர் மழை காரணமாக அரசின் பல்வேறு கட்டுமான பணிகள் முடிவதில் தாமதம் ஆகி வருகிறது. இதே போன்று கோத்தகிரி – ஊட்டி முக்கிய சாலையில் இருந்து தொட்டபெட்டா காட்சி முனைக்கு பிரியும் சாலையின் பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதனால் நாளை (20.8.24 முதல் 22.8.24 வரை) 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

News August 19, 2024

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இரவு 7 மணி வரை நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

News August 19, 2024

சிலை செய்யும் போட்டி முதல் பரிசு ரூ.50,000

image

தெய்வீக, கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விநாயகர் சிலை வடிவமைக்கும் போட்டி நடைபெறவுள்ளது. வடிவமைத்த சிலையை செப்.1 முதல் 4 தேதிக்குள் உபதலை கிராமத்தில் உள்ள சாய் நிவாஸ் ஆசிரமத்தில் சமர்பிக்க வேண்டும் என்று குரு நவீன் சாய் அறிவித்துள்ளார். இதில், முதல் பரிசு ரூ.50,000, 2வது ரூ.10,000, 3வது பரிசு ரூ.7500 வழங்கப்படுகிறது.

News August 19, 2024

நீலகிரியில் விடுதிகளை இடிக்க நோட்டீஸ்

image

நீலகிரி வன பகுதியில் யானை வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட 35 தனியார் விடுதிகளுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்டு நீதிபதி வெங்கட்ராமன் கமிட்டி அறிக்கையின்படி, வழித்தட விடுதிகளை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என விடுதியாளர்களுக்கு நேற்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News August 19, 2024

நீலகிரியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

image

நீலகிரி மாமாவட்டத்தில் கிழங்கு, கேரட் உள்ளிட்ட மழை காய்கறிகள் பயிரிடப்பட்டாலும், மாவட்டத்தின் பல இடங்களில் சிறிய அளவிலான விலை நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள், புருக்கோலி எனப்படும் காலிபிளவர் வகையைச் சார்ந்த காய்கறியை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் கட்டுபடியாகக் கூடிய நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News August 19, 2024

நீலகிரி: மருத்துவமனைகளில் டிஎஸ்பிகள் ஆய்வு

image

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்திரவின் பேரில் கூடலூர், குன்னூர், கோத்தகிரி கோட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை அப்பகுதி டிஎஸ்பிகள் நேற்று (18ம் தேதி) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களிடம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டு அறிந்தனர்.

News August 19, 2024

நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் கூடலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!