Thenilgiris

News August 21, 2024

நீலகிரியில் பூத்து குலுங்கும் செர்ரி பூக்கள்

image

நீலகிரி மாவட்டத்தில் உதகை, மஞ்சூர், கைகாட்டி, குன்னூர், கோத்தகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் ஒரு சில இடங்களில் செர்ரி மரங்கள் அதிக அளவில் பூத்துள்ளன. இதனால் நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், செர்ரி பூக்களை கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

News August 21, 2024

காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

நீலகிரி மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் கோடமூலா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News August 21, 2024

BREAKING நீலகிரியில் மழை

image

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News August 21, 2024

நீலகிரியில் கார் கவிழ்ந்து விபத்து

image

கேரளா, காசர்கோடு பகுதியை சேர்ந்த யாசர் அப்துல்லா அகமத் (51), தனது மனைவி குழந்தைகளுடன் நேற்று ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார். தலைகுந்தா பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர மண் திட்டில் ஏறிய கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புதுமந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 21, 2024

வெறிச்சோடிய குன்னூர் படகு இல்ல ஏரி

image

நீலகிரியில் மழை பெய்து வருவதாலும், வயநாடு நிலச்சரிவு காரணமாக கேரளா பயணிகள் வருகை குறைந்ததாலும், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அமைந்துள்ள படகு இல்ல ஏரிக்கு, படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் வராததால் ஏரி வெறிச்சோடி காணப்படுகிறது.

News August 21, 2024

நீலகிரியில் புலிகள் விஷம் வைத்து கொலை?

image

கூடலூர், பிதிர்காடு, நெலாக்கோட்டை அருகே வன ஊழியர்கள் நேற்று ரோந்து சென்றபோது 2 புலிகள் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்தனர். இதை 3 கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் புலிகள் அதே பகுதியில் எரியூட்டப்பட்டன. மேலும் அதே பகுதியில் காட்டுப்பன்றி ஒன்று விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிந்தது. புலியும் விஷத்தில் பலியா? எனத் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

News August 20, 2024

கோத்தகிரியில் யானை மிதித்து ஆதிவாசி பெண் பலி

image

கோத்தகிரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மாமரம் எஸ்டேட். அதன் அருகே காட்டு பகுதியில் உள்ள வெள்ளரி கொம்பை, சுண்டப்பட்டியை சேர்ந்த ஆதிவாசி பெண் ஜானகி (65) இன்று மாலை யானை மிதித்து பலியானதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதன் பேரில் வனத்துறை, வருவாய்துறை, காவல் துறையினர் அங்கு விரைந்து உள்ளனர்.

News August 20, 2024

நீலகிரி மலை ரயில் சேவை மேலும் 3 நாள் ரத்து

image

நீலகிரி, ‘மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான’ மலை ரயில் சேவை ஆக.22ம் தேதி வரை ரத்து என்று ரயில்வே அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று (20.8.24) தொடர் சீரமைப்பு பணி காரணமாக மலை ரயில் போக்குவரத்து ரத்து மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆக.25 வரை சேவை இருக்காது என ரயில்வே அறிவித்து உள்ளது.

News August 20, 2024

நீலகிரியில் இறந்து கிடந்த 2 புலிகள்

image

நீலகிரி, பிதர்காடு வனப்பகுதி அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் 2 புலிகள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 புலிகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News August 20, 2024

நலம் விசாரித்த நீலகிரி எம்பி ஆ.ராசா

image

நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா இன்று கோத்தகிரி பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி கூறும் கூட்டங்களில் பங்கேற்க வருகிறார். இந்த நிலையில், கோவை மருத்துவமனையில் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வரும், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொன்தோஸை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

error: Content is protected !!