India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தேயிலை தோட்டத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்ட பன்றி உடலை உட்கொண்ட, 2 புலிகள் பலியாகின. இதை அடுத்து வனத்துறையினர் தொடர் விசாரணை நடத்தினர். அதில், எஸ்டேட் தொழிலாளர்களாக பணிபுரிந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த, சூரியநாத் பராக் (35), அமன் கொயாலா (24), சுபித் நன்வார் (25) ஆகியோர்களை வனசட்டத்தில் கைது செய்தனர்.

நீலகிரி: ஊட்டி நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் உதகை பார்சன் வேலி அணையை தமிழ்நாடு சட்ட பேரவையின் உறுதி மொழி குழு தலைவர் வேல்முருகன் தலமையில் குழு உறுப்பினர்கள் நேற்று பார்வையிட்டனர். அப்போது மழை, புயல் காலத்தில் மரம் விழுந்து ஏற்படும் மின் விநியோக பாதிப்பை தடுக்க ரூ.6 கோடியில் புதிய திட்டம் உள்ளதாக வேல்முருகன் தெரிவித்தார்.

நீலகிரி: பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த 20ம் தேதி 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய சோதனையில், விஷமருந்தி ஒரு காட்டுப்பன்றி இறந்து கிடந்ததும். அந்த பன்றியின் இறைச்சியை புலிகள் தின்றதால் இறந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக வனத்துறையின் 3வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எமரால்டு பகுதியில் வளர்ப்பு நாய்கள் சில மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற விவசாயியின் தோட்டத்தில் எலிகளை கட்டுப்படுத்த மீன் துண்டுகளில் விஷம் வைத்ததும், அதை நாய்கள் உண்டு இறந்ததையும் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர் வனத்துறையினர். தொடர்ந்து அந்த நபரின் வீடு மற்றும் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டதில் கடமான் கொம்புகள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர்.

குன்னூரில் இருந்து கோத்தகிரி நோக்கி சென்ற அரசு பேருந்து சிம்ஸ் பூங்கா அருகில் பயங்கர சத்தத்துடன் பின்புறம் டயர் வெடித்தது. பேருந்தின் உள்ளே வெப்பம் அதிகமானது. பயணிகள் அதிர்ச்சியுடன் அலறி கீழே இறங்கினார்கள். இதுகுறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறும்போது , சமவெளி பகுதி சாலைகளில் ஓடி தேய்ந்த டயர்களுக்கு பதிலாக புதிய டயர்களுடன் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றார்.

நீலகிரி: குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளியில் பிளஸ்1 படித்து வருபவர் ஆல்வின். இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டிகளில் பங்கேற்று தேசிய அளவில் முதல் 8 இடங்களில் இடம் பிடித்தார். இந்நிலையில், வரும் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பெங்களூரில் நடக்கும் 17 வயது முதல் 21 வயதுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆல்வின் பங்கேற்கவுள்ளார்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா பிதர்காடு அருகே ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (50). தொழிலாளியான இவரை கடந்த 8ஆம் தேதி முதல் காணவில்லை. இந்நிலையில் நேற்று அவர் பிதர்காடு அருகே தம்புராட்டிகுன்னுவில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அம்பலமூலா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கீழ் கோத்திரி பகுதியில் அபாயகரமான மரங்களை வெட்டும் பணியில் நேற்று 20 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், கடசோலை பகுதியை சேர்ந்த அழகு சுந்தரம் (35) என்பவரும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மரம் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சோலூர் மட்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர், சோலாடி பகுதிகளில் கடந்த 1 மாத காலமாக வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க மக்கள், வனத்துறையை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தினபுரம் என்ற இடத்தில் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் நேற்று முத்தங்கா வனப்பகுதியில் விடுவித்தனர்.

கூடலூர் அருகே பாட்டவயல் – வெள்ளேரி செல்லும் சாலை வழியாக பள்ளி வாகனங்கள் செல்வது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில், இன்று (21.8.24) காலை பள்ளி குழந்தைகள் செல்லும் நேரத்தில் திடீரென புலி ஒன்று வெளி வந்துள்ளது. சாலை ஓரத்தில் நடைபோட்டு பின் சிறிது நேரத்தில் மீண்டும் காட்டுக்குள் நுழைந்ததை பள்ளி குழந்தைகள் வேனில் இருந்து பார்த்து அலறினர்.
Sorry, no posts matched your criteria.