India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூடலூர் நகரில் மாணவர்கள் பள்ளி வந்து செல்லும் காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படுவதால் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதற்கு தீா்வு காணும் வகையில் பள்ளி, கல்லூரி செயல்படும் நாட்களில் காலை 8.30 முதல் 9.30 மணி வரை கன ரக வாகனங்கள் இயக்க போலீஸார் தடை விதித்து உள்ளனர்.

தொடர் விடுமுறையை அடுத்து நீலகிரியில் குவிந்த சுற்றுலா கூட்டம், சுற்றுலா தலங்களில் அலைமோதி வருகின்றன. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சி முனை, ஊட்டி, பைக்காரா படகு இல்லங்கள் என கூட்டம் நிறைந்து காணப்பட்டன. குறிப்பாக குன்னூர் ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நீலகிரியில் விளையும் மலை பூண்டு தரம், மணம், ருசி கொண்டதாக உள்ளதால் அதன் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் இன்று (25.8.24) நடைபெற்ற பூண்டு ஏலத்தில், முதல் ரகம் அதிக பட்சமாக 1 கிலோ ரூ.470க்கு விற்பனையானது. குறைந்த பட்ச விலையாக 1 கிலோ ரூ.360க்கு விற்பனையானது.

உதகையில் நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவை தலைவர் போஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் வரவேற்றார். இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் நகரங்கள், ஒன்றிய பகுதிகளில் கழக முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளர்கள் ரவிக்குமார், லட்சுமி, பொருளாளர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உதகை, மார்க்கெட்டில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க காய்கறி ஏல விற்பனை மையம் உள்ளது. அங்கு மிசோரம் மாநில தோட்டக்கலை துறை சிறப்பு செயலர் ராம்தின்லைனி தலைமையில் தோட்டகலை மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள், காய்கறி ஏல விற்பனையை நேற்று (24-தேதி) பார்வையிட்டனர். நீலகிரி கூட்டுறவு இணை பதிவாளர் தயாளன், துணை பதிவாளர் முத்துகுமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கூடலூர் பிதர்காடு பகுதி தேயிலை தோட்டத்தில் 2 புலிகள் பலியான வழக்கில் கைதான வட மாநில தொழிலாளர்கள் 3 பேரிடம் நேற்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் புலிகளின் நகம், பல் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக விஷம் வைத்தது தெரிய வந்தது. மேலும், இவர்களுக்கு வேறு ஏதேனும் பெரிய கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றுவதை ஊக்குவிக்கும் வகையில், காவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி கெளரவித்து வருகிறது. அந்தவகையில் இன்று நற்பணி புரிந்த காவலர்களுக்கு கோவை சரக காவல்துறை துணை தலைவர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் நீலகிரி எஸ்பி என்.எஸ்.நிஷா பங்கேற்றார்.

முன்னாள் முதல்வர் கருணாதியின் நூற்றாண்டை முன்னிட்டு, ‘என் உயிரினும் மேலான’ என்ற நீலகிரி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிக்கு, திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர் எஸ்.ஜோயல் மேலிட பார்வையாளராக வருகை புரிந்தார். அவரை நீலகிரி திமுக செயலாளர் பா.மு.முபாரக், துணை செயலாளர் ரவிகுமார் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றார்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 12 வயது முதல் 35 வரை அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். முன்பதிவு செய்ய கடைசி நாள் நாளை 25ஆம் தேதி என்றும் ஆர்வம் உள்ளவர்கள் https:/sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகை அருகே தொட்டபெட்டா சாலையில் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க பாஸ்ட் டிரேக் அமைப்பு வேலை நடைபெறுவதை முன்னிட்டு கடந்த 20 தேதி முதல் 23 தேதி வரை சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இன்று 24 தேதி வேலை தொடர்வதால் தொட்டபெட்டாவுக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே நாளை 25 தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என வன துறையினா் தெரிவித்துள்ளனா்.
Sorry, no posts matched your criteria.