Thenilgiris

News August 27, 2024

நீலகிரியில் இன்று கனமழை

image

கோவை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக #IMD தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தாக்கத்தின் காரணமாக கடந்த சில மாதங்களில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இன்றைய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News August 27, 2024

நீலகிரியில் விலை அதிகரிப்பு

image

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், மாவட்ட விவசாயிகள் விளைவிக்கும் உருளை கிழங்கு மற்றும் பூண்டு போன்றவற்றை ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில் இன்று (26.8.24) நடந்த ஏலத்தில் முதல் ரக உருளைகிழங்கு 1 கிலோ ரூ.56-க்கு விற்பனையானது. இது கடந்த வாரத்தை (ஆகஸ்ட் 19ஆம் தேதி) விட ரூ.12 அதிகமாகும்.

News August 27, 2024

நீலகிரி: லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

image

கோத்தகிரி ராம்சந்து பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் இன்று எஸ்ஐ வனகுமார் தலைமையில் போலீசார் கல்பனா காட்டேஜ் பகுதியில் நோட்டமிட்டனர். அப்போது அங்கு ஜோஸ்குமார் (46) என்பவரும், டானிங்டன் பகுதியில் மணி (72) என்பவரும் லாட்டரி விற்பதை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

News August 26, 2024

நீலகிரி: மஞ்சூர் மக்களிடம் குறைகள் கேட்டார் எஸ்பி

image

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பதவி ஏற்ற முதல் நாளில் இருந்து, நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று பொதுவான நடைமுறை மற்றும் சம்பவங்கள் குறித்து நேரில் ஆராய்ந்து வருகிறார். இந்த நிலையில் இன்று குந்தா தாலுகாவில் உள்ள மஞ்சூர் சென்று அப்பகுதி மக்களிடம் குறை, நிறைகளை கேட்டு அறிந்தார்.

News August 26, 2024

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழை பதிவு!

image

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நீலகிரி தேவாலா, வுட் பிரையர் எஸ்டேட் பகுதியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

News August 26, 2024

நீலகிரி: 50 நாய்களை பாதுகாத்து வளர்க்கும் பெண்

image

நீலகிரி: உதகையில் NSPCA அமைப்பு இயக்குநர் பிரேமா, 50 நாய்களை வளர்த்து வருகிறார். வீதிகளில் ஆதரவற்று இருக்கும் நாய்களை தன் பொறுப்பில் ஏற்று, மருத்துவ வசதி வழங்கி, தனி இடத்தில் உணவு வழங்கி பாதுகாத்து வருகிறார். இதுவரை சுமார் 1000 நாய்களுக்கு மருத்துவ வசதி வழங்கி காப்பாற்றி உள்ளார். இந்நிலையில் இன்று சர்வதேச நாய்கள் தினத்தை முன்னிட்டு பிரேமா அவர்களுக்கு பிராணிகள் நல ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News August 26, 2024

சென்னை கூட்டத்தில் பங்கேற்ற நீலகிரி நிர்வாகிகள்

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில செயலாளர் டாக்டர் ஜுபைர்கான் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாநில துணை செயலாளர் இரா.அன்வர்கான் (குன்னூர்) பங்கேற்றார். அவருடன் குன்னூர் கிளை செயலாளர் எம்.ஏ.ரகீம், இளைஞரணி சாதிக் பாட்ஷா, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அன்வர் ஆகியோர் பங்கேற்றார்கள்.

News August 26, 2024

தொட்டபெட்டா சிகரம் செல்ல அனுமதி

image

சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு வரும் உல்லாச பயணிகள் காண வரும் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றான தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலை பராமரிப்பு பணி காரணமாக மூடிவைக்கப்பட்டு இருந்தது. பயணிகளின் கூட்டம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் தொட்டபெட்டா செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

News August 26, 2024

நீலகிரியில் கத்தியால் குத்தி தம்பி கொலை

image

கூடலூர் பி.சி.வி. நகரை சேர்ந்தவர் ராகுல் (19). இவரது அண்ணன் சினோய் (26) குடிபோதையில் தந்தையை தாக்கியதை ராகுல் கண்டித்து தடுத்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அண்ணன் தம்பியை கத்தியால் குத்தி உள்ளார். இதில் காயம் அடைந்த ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கூடலூர் போலீசார் வழக்கு பதிந்து சியோனை தேடி வருகிறார்கள்.

News August 26, 2024

 நீலகிரி: கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைகள்

image

உபதலை சாய் நிவாஸ் ஆனந்தாமிர்தம் அரங்கில் இன்று காலை முதல் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஜல அபிஷேகம், திரவியங்கள் அபிஷேகம் உட்பட பூஜைகள் நடக்கின்றன. காலை 11 மணிக்கு சுவாமி தத்வன சைத்தன்யா மற்றும் பால வித்யா விகாஸ் குழந்தைகளின் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மாஷ்டமி சிறப்பு பக்தி பாடல்கள் நடைபெறுகிறது. மதியம் 1.40 மணிக்கு அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.

error: Content is protected !!