Thenilgiris

News August 29, 2024

நீலகிரியில் செந்நாய்கள் மர்மமான முறையில் மரணம்!

image

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சீகூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில் இரண்டு செந்நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு நேற்று மதியம் தகவல் வந்தது. இதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் குழு கால்நடை டாக்டருடன் விரைந்து சென்று விசாரித்தனர்.

News August 28, 2024

நீலகிரி சாதனை வாலிபருக்கு வரவேற்பு 

image

நீலகிரி: பந்தலூர் அம்மன்காவு கிராமத்தை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (25) . இவர் சுற்று சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக்காக கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சைக்கிள் பயணத்தை துவங்கினார். அவர் 18 மாநிலங்கள் வழியாக, நேபாளம் வரை 148 நாட்கள் 13582 கி.மீ. பயணம் செய்து இன்று காலை பந்தலூர்  திரும்பினார். அப்போது பந்தலூர் பகுதி மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

News August 28, 2024

நீலகிரி: ரூ.11 கோடியில் நலத்திட்ட உதவி

image

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த 13,946 பயனாளிகளுக்கு கடந்த 3 மாதங்களில் ரூ.10.91 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

ரூ.81 கோடி செலவில் ஊட்டிக்கு மாற்றுப்பாதை

image

உதகை நகருக்கு மாற்றுப்பாதை அமைக்க, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டார். அதன் அடிப்படையில், நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.81 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்வதை துறை அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

News August 27, 2024

நீலகிரியில் நடந்த கொலை குறித்து போலீசார் விளக்கம்

image

நீலகிரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “மேலே பதிவிடப்பட்ட செய்தி தவறான செய்தி ஆகும். இது குடும்பத்தகராறில் நடந்த கொலை என்றும், கஞ்சா போதையில் கொலை நடக்கவில்லை என்றும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும், கொலையாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலையாளிக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 27, 2024

‘நீலகிரியில் பசுந்தேயிலைக்கு ரூ.35 வழங்க வேண்டும்’

image

குன்னூர் தேயிலை வாரிய மண்டல இயக்குனர்கள் அலுவலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது டெல்லியில் இருந்து வர்த்தகத்துறை உயர் அதிகாரி ராய் பேசினார். மேலும், மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் தும்பூர் ஐ. போஜன் பேசுகையில், ” நீலகிரியில் பசுந்தேயிலைக்கு வழங்கப்படும் சராசரியாக ஒரு கிலோ ரூ.15 விலை கட்டுப்படி இல்லை. குறைந்தபட்ச விலை ரூ.35 வழங்க வேண்டும் என்றார்.

News August 27, 2024

நீலகிரி: காவலர்கள் குடியிருப்பு பகுதிகளில் எஸ்பி பார்வை

image

நீலகிரி உதகை புதுமந்து பகுதியில் காவல்துறை காவலர்களுக்கான 120 குடியிருப்புகள் உள்ளன. அங்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா இன்று பார்வையிட்டார். அப்போது, காவலர்களின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டு கலந்துரையாடினார். காவலர்கள் குடியிருப்பு பகுதிக்கு முதன்முறையாக ஒரு காவல் கண்காணிப்பாளர் வருகை மகிழ்வாக உள்ளது என்று காவலர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

News August 27, 2024

நீலகிரி: காவலர் குடும்பத்திடம் குறைகளை கேட்டறிந்த எஸ்பி

image

நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். மேலும், காவலர்களிடமும் குறைகளை கேட்டு அதை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று உதகையில் பகுதியில் உள்ள காவலர்கள் குடும்பத்தினரை அவர்களது குடியிருப்புக்கு சென்று சந்தித்ததுடன், குறைகளையும் கேட்டறிந்தார்.

News August 27, 2024

நீலகிரியில் தம்பியை கொன்ற அண்ணன் கைது

image

கூடலூர் பி.சி.வி. நகரை சேர்ந்த சினோய் (26), இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தம்பி ராகுலை (19) கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலை மறைவு ஆனார். இது தொடர்பாக கூடலூர் காவல் ஆய்வாளர் சாகுல் அமீது, உதவி ஆய்வாளர் கபில்தேவ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சினோயை தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

News August 27, 2024

நீலகிரியில் தம்பியை கொன்ற அண்ணன் கைது

image

கூடலூர் பி.சி.வி. நகரை சேர்ந்த சினோய் (26), இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தம்பி ராகுலை (19) கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலை மறைவு ஆனார். இது தொடர்பாக கூடலூர் காவல் ஆய்வாளர் சாகுல் அமீது, உதவி ஆய்வாளர் கபில்தேவ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சினோயை தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!