India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காந்தி மைதானப் பகுதியில் யாகூப் என்பவருக்கு சொந்தமான மீன் கடையில் 16 கிலோ கெட்டுப் போன மீன்களை உணவு பாதுகாப்பு அலுவலர் குமர குருபரன் பறிமுதல் செய்து அவற்றை பினாயில் ஊற்றி அழித்தார். மேலும் மீன்களை வெட்ட பயன்படுத்திய துருப்பிடித்த கத்திகளை அப்புறப்படுத்தி, புதிய கத்திகளை பயன்படுத்த வேண்டும் எச்சரித்து, உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 55 ன் கீழ் நோட்டீஸ் வழங்கி,1000 ரூபாய் அபராதம் விதித்தார்.

நீலகிரி: கூடலூர் அடுத்த கரியசோலையில் நேற்று (30ஆம் தேதி) இரவு அரசு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை ஓட்டுநர் சென்று பார்த்தபோது பேருந்து காணவில்லை. அந்த பேருந்தை தேடி சென்றபோது 3 கி.மீ தூரத்தில் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து தேவாலா பில்லு கடை பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீலகிரி: கூடலூர் வனக்கோட்டத்தில் தினமும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் முதன் முறையாக விவசாயிகளிடம் வனத்துறையினர் குறை கேட்கும் நிகழ்ச்சி, கூடலூர் வன அலுவலர் அலுவலகத்தில் நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த முகாம் தொடர்ந்து மாதந்தோறும் நடத்தப்படும் என வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

கோத்தகிரி பகுதியை சேர்ந்த பழனிவேல் (54), அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய குன்னூர் போலீசார் போக்சோ சட்டத்தல் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பழனிவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று நீதிபதி உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாண்டியார் தேயிலை தோட்டத்தில் பெண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலை அடுத்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் யானை இறப்பு குறித்து கால்நடை உதவி மருத்துவக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின் யானை இறப்பு குறித்த தகவல் தெரிய வரும். அதனைத் தொடர்ந்து யானை அப்பகுதியிலேயே புதைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடலூர், நடுவட்டம் , முதுமலை பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நிழலத்தடி நீரும் வெகுவாக உயர்ந்துள்ளது. சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் ஆபத்தை கருத்தில் கொண்டு, ஆற்றின் கரைக்கு சென்று குளிப்பது, மீன்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை மக்கள் தவிர்க்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் கர்ப்பிணி பெண் ராஜூஷா (20). இவர் நேற்று சேரம்பாடியில் இருந்து 108 ஆம்புலன்சில் கூடலூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது பிரசவ வலி அதிகரித்ததை அடுத்து, ஆம்புலன்ஸ் ஓரமாக நிறுத்தப்பட்டு, செவிலியர் எலிசபெத் உள்ளிட்டவர்கள் பிரசவம் பார்த்ததில் ராஜூஷாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.

குன்னூர் காந்திபுரம் இந்திரா நகர் மக்களுக்கு கடந்த 2 வருடமாக நடைபாதை, கழிவறை, தெருவிளக்கு, தடுப்புச்சுவர் அமைத்து கொடுக்க பலமுறை நகராட்சி ஆணையரிடம் முறையிட்டும் இதுவரை சரிசெய்யவில்லை. இதனால் பள்ளி குழந்தைகள் சாக்கடை கால்வாயில் விழும் ஆபத்து உள்ளதாக கவுன்சிலர் தெரிவித்தார். ‘எங்க ஊருக்கு ஒருமுறை வந்து பாருங்க; மக்களின் கஷ்டம் தெரியும்’ என ஆணையரிடம் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

கோத்தகிரியில் உள்ள செல்போன் கடையில், செல்போன் பேட்டரி உப்பி இருந்த நிலையில், அதை மாற்றுவதற்காக திறந்தபோது, எதிர்பாராதவிதமாக பேட்டரி வெடித்து சிதறியது. இதில் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன், கடையின் உரிமையாளர் ரமேஷ் (44) தப்பினார். இனிவரும் காலங்களில் பொதுமக்கள், அவர்களது செல்போனின் பேட்டரி, உப்பிய நிலையில் இருந்தால், அதை உடனடியாக மாற்றி பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் செப். 17ஆம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில், நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்க பொதுக்குழு கூட்டம், காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எனவே, உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.