India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று ஊட்டியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தியை சந்தித்து பேசியது உண்மை. அவர்கள் பேசியது என்ன என்பது விஜய்க்கு தான் தெரியும்” என்றார்.

நீலகிரி: கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து, (Through Elite Education) வழியாக தேர்வு செய்யப்பட்ட, முதல் மைல் நிமினி வயல் பகுதியை சேர்ந்த மாணவி பூர்ணிமா, உயர் கல்விக்காக தைவான் நாட்டிற்கு சென்று படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரை கல்வித்துறை மேற்பார்வையாளர் ஆசிரியர் லட்சுமணன், ஆசிரியை திலகவேணி, திமுக மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் வெண்ணிலா ஆகியோர் நேற்று வழியனுப்பி வைத்தனர்

நீலகிரி மாவட்டம் , கேத்தி பேரூராட்சியில் பிரகாசபுரம் என்ற பகுதி உள்ளது . அந்த பகுதி மக்களுடைய குடிநீர் வசதிக்காக ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் குடி நீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது . அதற்கான குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் நடைபெறுகிறது . கேத்தி பேரூராட்சி தலைவர் திருமதி ஹேமமாலினி மணி அவர்கள் இன்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார் .

நீலகிரியில் உள்ள உபதலை, கேத்தி, இத்தலார், தும்மனட்டி, கூக்கல் உள்ளிட்ட இடங்களில் விளையும் பூண்டு மருத்துவ குணத்துக்கு பலர் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் இன்று நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க ஏல மையத்தில் முதல் ரக பூண்டு கடந்த வாரத்தை போலவே, 1 கிலோ ரூ.470 க்கும், 2 ம் ரக பூண்டு ரூ.360க்கும் விற்பனை ஆனது.

குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே பெய்த மழையின் போது ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு மற்றும் கல் விழுந்ததால் மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், தொடர்ந்து ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து 7:10க்கு புறப்பட்ட மலை ரயில் குன்னூருக்கு 10:10 வந்தடைந்தது.

உதகை சிறுவர் மன்றத்தில் VETERRANS INDIA SPORTS WING அமைப்பு சார்பில் “Mr Nilgiris – 2024” மற்றும் “Mr. Tamilnadu” போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட திமுக துணை செயலாளரும், உதகை நகரமன்ற துணை தலைவருமான ஜே. ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ஜே. ரவிக்குமார் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார்.

ஊட்டி பென்னட் மார்க்கெட்டை சேர்ந்தவர் யாஸ்பின். இவரது மனைவி ஆஷிகா பர்வீன். இந்நிலையில் ஆஷிகா பர்வீன் தனது கணவர் வீட்டில் திடீரென உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், காபியில் சயனைடு விஷம் கலந்து ஆஷிகா கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து யாஸ்பின், இம்ரான், முக்தார் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கூடலூர், காரியாலையில் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து, நேற்று காலையில் மாயமானது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் பிரசன்ன குமார் மற்றும் நடத்துநர் நாகேந்திரன் ஆகியோர் பேருந்தை தேடினர். அப்போது தேவாலா சாலையில் 3 கி.மீ தூரத்தில் பேருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, பேருந்தை கடத்திச் சென்ற தேவாலா பகுதியை சேர்ந்த ரிஷால் (21) என்பவரை கைது செய்தனர்.

மசினகுடி ஆச்சக்கரை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் யானைகளுக்கு உணவு அளித்ததாக வனத் துறையினர் 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளி வந்து உள்ளனர். இந்த நிலையில். இன்று (31 ம் தேதி) உதகை தாசில்தார் சரவணகுமார் தலைமையில் சென்ற அதிகாரிகள், 3 நாட்களுக்குள் விடுதியை காலி செய்து மூட வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கினர்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் சுற்றுலாத் தலங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றுலா அபிவிருத்தி பணிகள் குறித்தும், சுதேசி தர்ஷன் 2.0 தொடர்பாக அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்கள் கொண்ட குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடைபெற்றது. இதில் நடுவட்டம் ஜெயில் புணரமைப்பு, நெடுகுளா சுற்றுலா தலங்களை மேம்பாடு செய்தல், மாதிரி கிராமம் அமைத்தல் குறித்து ஆலோசிக்கபட்டது .
Sorry, no posts matched your criteria.