India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2004ஐ முன்னிட்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் டி.கிரண் மற்றும் சந்தீப் குமார் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட் ஆட்சியர் மு.அருணா முன்னிலை வகித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோத்தகிரி பகுதியில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கோத்தகிரி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் குடிபோதையில் வாகனத்தை இயக்கிய 7 பேருக்கு மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோத்தகிரி மாஜிஸ்திரேட் வனிதா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
ஓவேலியில் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை பகுதியை சேர்ந்தவர் புஷ்ராஜ். இவர் வழக்கம் போல் தனது பசு மாடுகளை நேற்று ( மார்ச் 19) மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார். அதில் ஒரு மாடு திரும்பி வரவில்லை. இதையடுத்து தேடி சென்ற போது புலியிடம் சிக்கி பலியானது தெரிந்தது. ஏற்கனவே பந்தலூரில் பசுமாட்டை புலி வேட்டையாடி கொன்றது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மக்களவைத் தொகுதியின் (தனி) வேட்பாளராக ஆ.ராசா அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
கோவை ரோட்சோவுக்கு வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை காண திரளானவர்கள் வாகனங்கள் மூலம் கோத்தகிரி பகுதியிலிருந்து (மார்ச் 18) சென்றனர். கோத்தகிரியை அடுத்த ஒன்னதலை கிராமத்தை சேர்ந்தவரும், முன்னாள் தேயிலை வாரிய உறுப்பினரும், மத்திய அரசு வழக்கறிஞருமான குமரன் பிரதமரை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்.
நீலகிரி, உதகையில் இன்று (மார்ச் 19) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள புகழ் பெற்ற 2 சர்வதேச பள்ளிகளுக்கு மின் அஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் 3 வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.
உதகை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நான்காவது நாளான நேற்று (மார்ச் 18) நீலகிரி மாவட்ட ஒக்கிலிகர் இனத்தார் சார்பில் புலி வாகனத்தில் அம்மன் பராசக்தி அலங்காரத்தில் திரு உலா நடைபெற்றது. இதில் கேரளாவின் செண்டை மேளம், கர்நாடகாவின் கிராமிய நடனம், தமிழ்நாட்டின் கோலாட்டம், தப்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நீலகிரி, தேயிலையில் மைட்ஸ் நோய் வெகுவாக பரவி வருகிறது. இதனால் மகசூல் குறைந்து, விவசாயிகளுக்கு பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி போஜராஜன் இன்று(மார்ச் 18) கூறுகையில், “வறட்சியால், ‘மைட்ஸ் ‘ நோய் அதிகரித்து உள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.