India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உதகை கலெக்டர் அலுவலகத்தல் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பேசும்பது “கட்டண பட்டியல் நுகர்வோருக்கு தெரியும்படி வாகனங்களில் ஓட்ட வேண்டும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 700 பயனாளிகளுக்கு தேர்வு முடிந்து விட்டது. அடுத்தகட்ட தேர்வு அறிவிப்பு வந்தவுடன் தொடங்கும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், எஸ்பி நிஷா முன்னிலையில் நடைபெற்றது. இதில், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் வகையில் அனைத்து துறை அதிகாரிகள் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாமை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 9ஆம் தேதி மதுரையில் துவக்கி வைக்கிறார். அதே நாளில் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், நீலகிரி மாவட்ட மகளிர் குழுக்களுக்கு வங்கிக் கடன்களை வழங்கி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைக்கவுள்ளார் என கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு, கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் முத்துசாமி, செல்வநாயகி, கிளமெண்ட் அந்தோணிராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

ஆண்டுதோறும் செப்.5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியருக்கு, ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி, மாநில அரசு கவுரவப்படுத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று சென்னையில் விருது பெற உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்து 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 60க்கும் மேற்பட்ட சமூதாய தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் சிறந்த சமூக தலைவருக்கான விருது, கைகாட்டி சுப்பிரமணிக்கு வழங்கப்பட்டது. மேலும், சிறந்த ஆளுமைக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல், சிரீராம் ஜெயகாந்தன் எழுதிய ‘பாணர்கள் எங்கே போனார்கள்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த விழாவை டிகே கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் லட்சுமிநாதன் நடத்தினார்.

நீலகிரி: முதுமலை தெப்பக்காடு சாலையில், பைக்கில் பயணித்த 2 பேர், யானைக்கு இடையூறு ஏற்படுத்தியதை அடுத்து, கோபம் அடைந்த யானை துரத்தியதால் பைக்கில் ஏறி தப்பினர். இந்த தகவல் அறிந்த வனத்துறையினர், தொரப்பள்ளி சோதனை சாவடியில் வைத்து, பைக்கில் வந்த கேரள வாலிபர்கள் அனிஷ், சாருக் ஆகிய 2 பேரை தடுத்து தலா ரூ.2500 அபராதம் விதித்தனர்.

நீலகிரி, பெட்டட்டி அரசுப்பள்ளி ஆசிரியை கீதா, குந்தா கேம்ப் பள்ளி ஆசிரியை சபிதா, சோகதொரை பள்ளி ஆசிரியை புஷ்பா, நெடுகுளா பள்ளி ஆசிரியை எலிசபெத், தும்மனட்டி பள்ளி ஆசிரியர் கணேஷ், கோத்தகிரி அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சரவணகுமார், கூடலூர் அரசுபள்ளி ஆசிரியை மீரா, கூடலூர் அம்பலவயல் பள்ளி பட்டதாரி ஆசிரியை கமலாம்பிகை , ஹில் போர்ட் பள்ளி ஆசிரியை சுமத்திரா ஆகியோர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

2024-25 ஆம் ஆண்டிற்கான நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதிய தொகை 6 ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பிக்கலாம். விளையாட்டுத் துறையில் சர்வதேச தேசிய போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in முகவரியில் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

குன்னூர் அருகே வசம்பள்ளம் பகுதியில் பகல் நேரத்தில் கரடி தேயிலைத் தோட்டத்தில் சுற்றித் திரிந்ததால் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் அச்சமடைந்தனர். தேயிலைத் தோட்டத்தில் உலா வந்த கரடியை அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தனது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.