India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி: மசினகுடி பொக்காபுரம் மேல்தக்கல் பகுதியை சேர்ந்தவர் தெய்வத்தாய் (47), இவரது மகன் கோகுல்ராஜ். இவர்கள் 2 பேரும் நேற்று பைக்கில் பொக்காபுரம் சாலை வழியாக சென்றனர். அப்போது திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை இவர்களை தாக்கியது. உடனே அவர்கள் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு ஓடிச்சென்று உயிர் தப்பினர். இதையடுத்து ஆத்திரமடைந்த யானை பைக்கை சேதப்படுத்தியது.

கோத்தகிரி கொட்டகம்பையை சேர்ந்தவர் பிரபாகரன்(32). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி ஷாலினி என்கிற மனைவி, 6 வயதில் மகள் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இருந்து விடுமுறைக்காக கோத்தகிரி வந்த இவர் ஆன் லைனில் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று. பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டமடைந்துள்ளார் . மனஉளைச்சலில் இருந்த அவர் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் புதியதாக அமைக்கப்படவுள்ள 13 புதிய வாக்கு சாவடிகளை ஆய்வு செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர், அரசு அதிகாரிகள் உள்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

உதகை நகரப் பகுதியில் அவ்வப்போது வனவிலங்குகள் சாலைகளுக்கு வந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்த நிலையில் இன்றைய தினம் இரவு உதகை ஹில்பங்க் பகுதியில் இருபதுக்கு மேற்பட்ட எருமைகள் பிரதான சாலை பகுதிக்குள் வந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் இழக்க ஓட்டுநர்கள் சிரமம் அடைந்து வந்தனர். மேலும் எருமைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோத்தகிரி அருகே மேல் தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் பணிபுரிந்து வருபவர் சேகர் என்பவரது மனைவி பேச்சியம்மாள் (50). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதகை அருகே உள்ள அவலாஞ்சி வன பகுதியில் புலி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. மின் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள் இங்கு உள்ளன. இந்த வன பகுதியில் இருந்து நேற்று மாலை வெளிவந்த புலி ஒன்று ஒய்யாரமாக நடை போட்டு ஓய்வு எடுத்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கினர். பின்னர் அது தானாக காட்டுக்குள் திரும்பி சென்றது.

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி இடைநின்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க, முகாம் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். இதன்படி, 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தோல்வியடைந்த மாணவ மாணவிகளுக்கு வரும் 10ம் தேதி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி குன்னூரிலும், 13ம் தேதி கூடலூர் பாத்திமா பள்ளியிலும், 17ம் தேதி உதகை புனித ஜோசப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலை செய்யப்பட வழக்கில், வங்கி பரிவர்த்தனை மூலம் பல குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அதன் அடிப்படையில, நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 12 பேரின் வங்கி பரிவர்த்தனை குறித்த விவரங்கள் கேட்டு சிபிசிஐடி போலீசார் வங்கிகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனவராக பணியாற்றி வருபவர் சரண்யா. இவர் யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள பணிகள் மட்டுமின்றி, யானை பாகன்களுக்கு புதிதாக கட்டி வரும் வீடுகளையும் கண்காணித்து வந்தார். இந்நிலையில் பணியில் மெத்தனமாக நடந்து கொண்டதாக கூறி நேற்று சரண்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த கூட்டம், கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி நிஷா முன்னிலை வகித்தார். இதில், பள்ளி – கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்கப்படுகிறதா? என்பதை துறை அலுவலர்கள், காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.