India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் புருசெல்லீஸ் எனப்படும் கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் இம்மாதம் 18ம் தேதி முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 4 மாதம் முதல் 8 மாத வயது கன்று குட்டிகளுக்கு செலுத்தப்பட உள்ளது. இத்தடுப்பூசி செலுத்தினால் ஆயுள் முழுதும் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால் விவசாயிகள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

நீலகிரி, குந்தா, பந்தலூர், கூடலூர், கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் சிறுத்தைகள், வளர்ப்பு நாய்களை வேட்டையாடி அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று கேத்தி, ராஜ்குமார் நகரில் வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்வி சென்றது. மேலும், சாலையில் உலா வருவது போல் சிறுத்தை வீடியோ ஒன்றை வெளியாகியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

ஊட்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம் சார்பில் இம்மாதம் வருகிற 20-ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது என்பதால் ஆர்வம் உள்ளவர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 14ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30. வரை நடக்கிறது. தேர்வில் 3610 பேர் பங்கேற்கின்றனர். இந்த தேர்வை முறையாக தடையின்றி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலை உள்ளது. மசினகுடி பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் நடராஜன். அவர் இன்று மாலை புகழ்பெற்ற பொக்காபுரம் கோவிலுக்கு சென்று திரும்பி வரும் வழியில் யானை தாக்கியது. எனவே அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த விபத்து குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி அலுவலகம் உள்ளது. இந்த ஊராட்சியில் பல பணிகளுக்கு கமிஷன் பெற்றுக்கொண்டு பணி ஒதுக்கியதால் தரமற்ற பணிகள் நடைபெற்றுள்ளதாக பொதுமக்களின் புகாரினை தொடர்ந்து, நேற்றைய தினம் இரவு விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.3,25 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டதால். ஊராட்சி செயலாளர் சஜித், தலைவர் லில்லி இலியாஸ் (ம) ஊழியர்களுடன் விசாரணை நடத்தினார்கள்.

தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மீலாது நபி பண்டிகையன்று டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள், ஹோட்டலுடன் இணைந்த பார்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. விதியை மீறினால் டாஸ்மாக் மேலாளர், காவல்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று குன்னூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தமிழக முதல்வர் முதலீடுகளை ஈர்ப்பதாக வெளிநாடு சென்று வருவது எல்லாம் கண்துடைப்பு நாடகம். துபாய் சென்று சென்று முதலீடு ஈர்த்ததாக கூறியதற்கே இன்னும் விடை தெரியவில்லை’ என்றார். அப்போது பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உடனிருந்தார்.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சைபர் குற்றங்கள் பற்றி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், எல்ஐசி ஏஜெண்டுகள் போல பேசி பணம் பறிக்கும் பொய்யான கும்பலிடம் தங்களது ஏடிஎம் கார்டு நம்பரையோ, ஓடிபி நம்பரையோ கூற வேண்டாம். இதை நம்பி ஏமாற வேண்டாம். மேலும், யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால், உடனே சைபர் கிரைம் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கவும்.

நீலகிரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்கை பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய செய்தி ஒலிபரப்பு துறை மந்திரி எல்.முருகன் நேற்று குன்னூர் பகுதியில் வீடுவீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து பாஜக உறுப்பினராக சேர்த்தார். அவருடன் நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.