India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் கூடுதல் தலைமை செயலாளரும், நீலகிரி சுற்று சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான சுர்ஜித் கே. சவுத்திரி நீலகிரி ஆட்சியருக்கு இன்று மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் குன்னூர், எடப்பள்ளி, இளித்தொரை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் விதி மீறி பொக்லைன் மூலம் பாறை உடைக்கும் முயற்சி நடக்கிறது. இதனால் நிலச்சரிவு அபாயம் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.
குன்னூர் பேருந்து நிலைய பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 7 கடைகளுக்கு நேற்று (ஏப். 26) வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ்களை நேரில் சமர்ப்பித்தனர். கோர்ட் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 42 கடைகளும், இரண்டாம் கட்டமாக 2 கடைகளும் என 44 கடைகள் அகற்றப்பட்டன. விரைவில் 7 கடைகள் இடிக்கப்பட உள்ளது என இன்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
கூடலூர் மார்த்தோமா நகர் பகுதியில் நேற்று இரவு (ஏப். 26) காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சாலையோர பலாப்பழம் கடையிலிருந்து காட்டு யானை ஒன்று பழத்தை எடுத்து செல்வதை கண்டனர். உடனே போலீஸ் வாகனம் சைரன் ஒலிக்க செய்து யானையை விரட்டினார்கள். வறட்சி காரணமாக வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி உலா வருவது வாடிக்கையாகி வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் யானைகள் மற்றும் வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்கு காமராஜர் அணை திறக்கப்பட்டுள்ளது . அதனால் ஆற்று பகுதியில் காலை , மாலை நேரங்களில் வனவிலங்குகள் தண்ணீர் தாகத்தை தீர்த்துக்கொள்கின்றன . தெப்பக்காடு வாழ் பழங்குடியினர் குளியல் போடுகின்றனர் . இந்நிலையில் முதுமலை பகுதிகளில் மழை அறிகுறி உள்ளதாக இயற்கை சூழல் ஆர்வலர் மானஸ் சிவதாஸ் தெரிவித்தார்.
நீலகிரியில் உள்ள 6 தாலுகாவில் 73 டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. இவைகளில் தினசரி 90 ஆயிரம் முதல் 1 லட்சம் பல்வேறு மது வகைகள் விற்கப்படுகிறது. அதில் பீர் வகை 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பாட்டில் விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரம் பாட்டிலாக விற்பனை அதிகரித்து உள்ளது என டாஸ்மாக் அதிகாரி இன்று (ஏப்.26) கூறினார்.
நீலகிரி, மே 1ல் கோடை விழா தொடங்குவதை அடுத்து சுற்றுலா கூட்டம் கூடுதலாகும். இதை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை சீராக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று (ஏப். 25) நடந்தது. இதில் கடை நடத்தும் வியாபாரிகள் 4 சக்கரங்களுக்கு பதிலாக 2 சக்கர வாகனத்தை பயன் படும் படி அறிவுறுத்தப் பட்டது.
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக உள்ள கிரிக்கெட் அணிகள் [ஏ.பி.சி.3 டிவிஷன் ஆக பிரிக்கப்பட்டு ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோத்தகிரி காந்தி மைதானத்தில் சி டிவிஷன் பிரிவு போட்டியில் கூடலூர் ஸ்ரீ ஜான் அணி மற்றும் குன்னூர் ஹில்ஸ் குயின் அணி பங்கேற்று விளையாடினர். 33 ஓவர்கள் கொண்ட போட்டியில் கூடலூர் ஸ்ரீஜன் அணி அணி 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
கேரளாவில் நாளை (ஏப்.26) மக்களவைத் தேர்தல் நடைப் பெறுகிறது. இதையொட்டி, தமிழக எல்லையான, நம்பியார், குன்னூர், தாளூர், அய்யன் கொல்லி, எருமாடு ஆகிய இடங்களில் உள்ள 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. நாளை மறுநாள் (ஏப். 27) கடைகள் திறக்கப்படும். இதனால் மது பிரியர்கள் கோரஞ்சால், குந்தலாடி ஆகிய இடங்களில் உள்ள கடைகளை நாடி செல்கின்றனர்.
பழங்குடியினர் அருங்காட்சியகம், உதகையில் மு.பாலாடா, பழங்குடியினர் ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ளது. இவ்வருங்காட்சியகம் கி.பி 1989 -1995ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், பழங்குடியினரின் பாரம்பரிய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாகும். இதில் தமிழகத்தில் வாழும் 36 வகை பழங்குடியினரின் ஆபரணங்கள், வேட்டைக்கருவிகள், வீட்டுப்பொருட்கள், மாதிரி வீடுகள் விவசாய கருவிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் பயணியர் வசதிக்காக, சுற்றுலா சார்ந்த வாகன சவாரி, தங்கும் விடுதி ஆகியவை ‘ஆன்லைன் புக்கிங் செய்யும் வசதி வனத்துறை மூலம் செயல்படுகிறது. இந்நிலையில், முதுமலை துணை இயக்குநர் வித்யா, “MUDUMALAITIGERRESERVE. COM என்ற இணையதளத்தில் மட்டும் முன் பதிவு செய்ய வேண்டும். எந்த தனியார் ஏஜென்சிகளுக்கும் அனுமதி வழங்கப் படவில்லை” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.