Thenilgiris

News September 17, 2024

எஸ்.பி அலுவலகத்தில் சமூக நீதி நாள உறுதி மொழி

image

பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதியன்று சமூக நீதி நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட காவல் துறை அலுவலக வளாகத்தில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில், காவல் துறையினர் உறுதி மொழி ஏற்று கொண்டனர். இதில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News September 17, 2024

ஊர் காவல் படை ஏரியா கமாண்டர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

image

நீலகிரி மாவட்ட ஊர்காவல் படை பிரிவில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு தகுதியான நபர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களாக இருக்க வேண்டும். இது கெளரவ பதவி என்பதால் ஊதியம் வழங்கபடாது. இதற்கான விண்ணப்பங்களை 25.9.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும். இத்தகவலை  நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா தெரிவித்தார்.

News September 17, 2024

நீலகிரி: உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

image

நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், புதுகோட்டை மாவட்டம், பள்ளத்திவிடுதி கிராமயிலியம்மன் கோயில் குளத்தில் எதிர்பாராத விதமாக மூழ்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 3 நபர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் காசோலைகளை கலெக்டர் லட்சுமி பவ்யா வழங்கினார்.

News September 16, 2024

நீலகிரி: வெயிலின் தாக்கத்தால் வாடும் தேயிலை

image

நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் அரசு, தனியார், சிறு, குறு தேயிலை தோட்டங்களில் வறட்சி ஏற்பட்டு மகசூல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேயிலைச் செடிகளை ஸ்பிரிங்கலர் மூலம் நீர் தெளித்து ஓரளவு பாதுகாத்து வருகின்றனர். மேலும், மழை பெய்தால் மட்டுமே மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

News September 16, 2024

நீலகிரி: விபத்தில் சிக்கிய தொழிலாளி உயிரிழப்பு

image

திருப்பூர் விஜயபுரம் சென்னிமலைபாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(42). இவர் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பஜாரில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, கார் மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

News September 16, 2024

நீலகிரி: 1 லட்சம் மரக்கன்று நட திட்டம்

image

‘காலநிலையை மீட்டு எடுத்தல், பசுமை நீலகிரி 2024’ என்ற திட்டத்தின் கீழ், 1 லட்சம் மர கன்றுகள் நடுவதற்கான முன் எடுப்பை அறிவியல் இயக்கம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜூ, “இத்திட்டத்தை தொண்டு நிறுவனங்கள், வன ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நிறைவேற்ற படும் என்றார். விரும்புவோர், 9453317439, 9443379545 எண்களை அணுகவும்.

News September 16, 2024

தீ விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் உயிரிழப்பு

image

கோத்தகிரி அருகே ஓரசோலை கிராமத்தைச் சேர்ந்த மனோ என்பவரது மனைவி சிவரஞ்சனி (32). இவர் கடந்த 9ம் தேதி காலை ஸ்டவ்வில் தண்ணீர் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கும்போது அருகில் இருந்த கெரசின் கேன் சரிந்து விழுந்துள்ளதில் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி சிவரஞ்சனி 90 சதவீத தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

News September 16, 2024

பூத்துக்குலுக்கும் குறிஞ்சி மலர்கள்

image

நீலகிரி மாவட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் “ஸ்டபிலான்தஸ் குந்தியானஸ்” என்ற குறிச்சி மலர்கள் 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும். இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் இப்பூக்கள் பூத்து குலுங்குகிறது. இதை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

News September 15, 2024

நீலகிரி இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
➤நீலகிரியில் வெடி பொருள் பயன்படுத்தியவர் கைது
➤நீலகிரி: பாலியல் வழக்கில் ஆசிரியர் கைது
➤அரவோனுவில் அண்ணா நூலகம் திறப்பு
➤கூடலூர்: மக்கள் நீதிமன்றத்தில் 191 வழக்குகளுக்கு தீர்வு
➤வெலிங்டனில் விநாயகர் சிலைகள் கரைப்பு

News September 15, 2024

நீலகிரியில் கலர் டிரஸ்சில் காவலர்கள்

image

நீலகிரி மாவட்டத்தில் காவலர்கள் காக்கி யூனிபார்மில் செல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனாலும், வாரத்திற்கு ஒருமுறை ‘காவத்த’ முன்னிட்டு வண்ணமிகு கலர் டிரஸ் அணிந்து நடைப்பயிற்சி செல்வது வித்தியாசமாக தெரிந்தது. இந்த நடைப்பயிற்சி நீலகிரி மாவட்ட எஸ்பி என் எஸ்.நிஷா தலைமையில் நேற்று நடந்தது. அவருடன் காவல் துறையினர் திரளாக நடைப்பயிற்சி சென்றனர்.

error: Content is protected !!