India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உலிக்கல் பேரூராட்சி அருகே சாலை ஓர தடுப்பு சுவரில் (COMPOUND-WALL) பிக்கப் லாரி மோதி நேற்று விபத்துக்கு உள்ளானது. இதில் டிரைவர் முருகன் பூங்கா புல் தரையில் தூக்கி வீசப்பட்டதால் காயம் இன்றி உயிர் தப்பினார். அதில் பயணித்த அல்மொல் குல்லா (34), அஸ்வின் பஞ்சாரெ (25) ஆகியோர் காயத்துடன் குன்னூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

உதகை பாரத ஸ்டேட் வங்கியின் 158வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று 18ஆம் தேதி, காலை 9:30 மணிக்கு வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் ஓய்வு ஊதியதாரர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். இந்த தகவலை முதன்மை மேலாளர் ரமேஷ் பாபு தெரிவித்தார்.

நீலகிரியில் 30 செ.மீ., முதல் 60 செ.மீ., வரை நீளம் உள்ள குறிஞ்சி மலர்கள் மலை சரிவுகளில் பூத்து குலுங்குகின்றன. கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்பு காடு பகுதியான எப்பநாடு, பிக்கபத்திமந்து மலை சரிவுகளில், 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி (ஸ்டாபிலாந்தஸ் குந்தியானஸ்) பூத்துள்ளன. இந்த பகுதியில் அத்துமீறி நுழைந்தால் அபராதம் விதிக்க படும் என வனத்துறை ரேஞ்சர் செல்வகுமார் தெரித்தார்.

நீலகிரி: குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை பரலியார் பகுதியில் எந்த ஒரு தனியார் தொலைதொடர்பு சேவையும் இதுவரை கிடைத்தது இல்லை. அரசின் சேவையான பிஎஸ்என்எல் சேவை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக இந்த சேவையும் துண்டிக்கப்பட்ட காரணத்தால் அவசரதேவைக்கு ஆம்புலன்ஸ் அழைக்கவும், தபால் துறை சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர்.

கோத்தகிரி ஜூட்ஸ் ஜூனியர் காலேஜ் அரங்கில், ஆங்கில (CISCE) பள்ளிகளுக்கு இடையிலான தேசிய கைப்பந்து போட்டிகள் இன்று (17ம் தேதி) நடந்தது. இதில் பேசிய மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, “மாணவ, மாணவியர் படிப்பை போலவே விளையாட்டிலும் ஆர்வம் காட்டுவது அவசியம்” என்றார். இதில் பள்ளி தாளாளர் தன்ராஜ், பள்ளி முதல்வர் சரோஜா தன்ராஜ், நிர்வாகி சம்ஜித் உட்பட பலர் பங்கேற்றனர்.

நீலகிரி: மஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் இன்கோ 7வது கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது ஏற்பட்டது. தொழிற்சாலையில் பணியாளர்கள் இல்லாததால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றான இன்கோ 7 தேயிலை தொழிற்சாலையில் தினந்தோறும் 3 ஷிப்டுகளாக வேலை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

உதகையில் மீலாது நபி விழா முன்னிட்டு இன்று ஊர்வலம் நடைபெற்றது. லோயர் பஜார், பெரிய பள்ளிவாசல் பகுதியில் கலெக்டர் லட்சுமி பாவ்யா தண்ணீரூ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஆகியோர் கொடி அசைத்து மிலாடி நபி விழா ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். ஊர்வலம் மார்க்கெட், மணிகூண்டு வழியாக காந்தி மைதானம் அடைந்தது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழ்நாடு- கேரள எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் தீவிர கண்காணிக்கப்படுகிறது. கேரள மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டு வரும் நிலையில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பரிசோதனைக்கு பிறகே தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது.

நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், காவல்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டு வருகிற வடகிழக்கு பருவ மழை நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், புதுகோட்டை மாவட்டம், பள்ளத்திவிடுதி கிராமயிலியம்மன் கோயில் குளத்தில் எதிர்பாராத விதமாக மூழ்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 3 நபர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் காசோலைகளை கலெக்டர் லட்சுமி பவ்யா வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.