India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம், உதகை தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்றத் துணைத் தலைவருமான ஹெச்.எம்.ராஜு நேற்று (மே 1) மாலை காலமானார். இவர் ‘மக்கள் நேசன்’ என்று பலராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவரது இழப்பு தங்கள் கட்சிக்கு பேரிழப்பு என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் குன்னூர் புளூ வேனோம் கிரிக்கெட் அணி மற்றும் கோத்தகிரி சிவகாமி ஸ்போர்ட்ஸ் அகடாமி அணிகள் பங்கேற்று விளையாடின.
35 ஓவரில் 249 ரன்கள் எடுத்து கோத்தகிரி சிவகாமி ஸ்போர்ட்ஸ் அகடாமி அணி வெற்றி பெற்றது.
கோத்தகிரி அருகே உள்ளது பெந்தட்டி. நேற்று (மே 1) இரவு சிறுத்தை ஒன்று கிராம நடைபாதை வழியாகச் சென்றுள்ளது. நடைபாதையை ஒட்டிய வீட்டில் குடியிருக்கும் மைதிலி என்ற பெண் இதை பார்த்து அச்சமடைந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக ‘லாங்உட்’ வன பகுதிக்குச் சென்றுள்ளது. இது குறித்து வனத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி வரையாடுகள் அழிவின் விளிம்பை எட்டி வருகின்றன. இவைகளை பாதுகாத்து இன விருத்தியை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு நீலகிரி வரையாடு மேம்பாடு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இவைகளின் கணக்கெடுப்பு இன்று (மே 1) 3 வது நாளாக நடைப்பெற்று வருகிறது. ட்ரோன் கருவி மூலம் புகைப் படம், வீடியோ எடுக்கப்பட்டு வருகிறது.
குன்னூர், கல்லார் முதல் காட்டேரி வரையிலான வளைவு சாலை, வன விலங்கு நடமாடும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் எக்காரணம் கொண்டும் சாலை ஓரம் சமைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அறிவித்து உள்ளது. மேலும் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில், சாலை ஓரங்களில் மது அருந்துவது, வன விலங்குகளை கண்டதும் செல்பி, புகை படம் எடுப்பது கூடாது என்றார்.
ஊட்டி நகர காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் மனோஜ்குமார் மற்றும் அருள் பாண்டி. இவர்கள் நேற்று
(ஏப் 30) படகு இல்லம் சாலையில் போக்குவரத்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக குடி போதையில் வந்த ராஜேஷ் (39), ஜீவா(38) ஆகியோர் தகராறில் ஈடுபட்டதுடன் கற்கள் வீசி தாக்கி உள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
நீலகிரியில் இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் சத்திய சிவன் கூறுகையில், நீலகிரியில் தற்போது வெப்பம் அதிகரித்த நிலையில் இங்குள்ள அணைகள் வறண்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வரும்போது குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் இ-பாஸ் நடைமுறையால் குடிநீர் பிரச்சனையை ஓரளவு சமாளிக்க முடியும் என்றார்.
தமிழக கேரளா எல்லை பகுதியில் அதிரடிப்படையினர் முகாமிட்டு நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பகல் 11 மணிக்கு வனப்பகுதிக்குள் சென்ற தண்டர்போஸ்ட் போலீசார் மற்றும் நக்சல் இடையே 9 முறை துப்பாக்கி சூடு சண்டை நடந்துள்ளது. இது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இது அந்த பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா விடுத்துள்ள செய்தியில், ‘வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதை தணிக்க, அதிக தண்ணீர் குடியுங்கள், வெயிலில் பயிற்சி வேண்டாம், காலை 11 முதல் 3.30 வரை சூரிய வெளிச்சத்தில் நிற்காதீர், மது குடிக்காதீர், பழம், காய்கறி சாப்பிடுங்கள், லேசான உணவை எடுத்து கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தி உள்ளார்.
குன்னூர் நகர மன்ற தலைவர் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் பா.மு.வாசிம் ராஜா அவர்கள் இன்று
குன்னூர் நகராட்சி 10வது வார்டு டைகர் ஹில் பகுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட தார் சாலையினை அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் ஐ.பாக்கியவதி அவர்களுடன் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட பிரதிநிதி எஸ்.மணிகண்டன் MC, ஒப்பந்ததாரர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.