India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூடலூர் அருகே நாடுகானியில் தமிழ்நாடு வனத்துறையின் ஜீன்புல் பூங்கா உள்ளது. அங்கு ஜீன்புல் சூழல் மேம்பாட்டு குழு சார்பாக லெமன் கிராஸ் (Lemon Grass) புல் தைலம் உற்பத்தி நிலையம் அமைக்கபட்டுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ , லெமன் கிராஸ் புல் தைலம் உற்பத்தி நிலையத்தை இன்று பிற்பகல் 2.30 அளவில் துவக்கி வைக்கிறார். இந்த தகவலை நாடுகாணி வன சரகர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊட்டி – குன்னூர் மற்றும் ஊட்டி – கேத்தி – ஊட்டி இடையே வரும் அக்டோபர் 12,13 மற்றும் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் உதகை பாஜக சார்பில் இன்று மத்திய பேருந்து நிலையம் பகுதியில், மாவட்ட தலைவர் எச் எச்.மோகன்ராஜ், நகர தலைவர் பிரவீன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஊட்டி எம்.பாலாடா பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வேட்டை கும்பல் பிடிபட்டனர். அவர்கள் வந்த காரை சோதனையிட்டதில் துப்பாக்கி, 5க்கும் மேற்பட்ட கத்திகள், டார்ச் லைட் உள்ளிட்டவைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு கலை போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக உதகை அரசு கலை கல்லூரியில் 13ஆம் தேதி காலை 9 மணிக்கு முன் பதிவு செய்யப்படுகிறது. இதில் பங்கேற்பவர்கள் 0422/2610290 / 9943433742 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஒரு பொறுப்பு அமைச்சரை நியமித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பிற பணிகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேத்தி பேரூராட்சி , எல்லநள்ளி பஸ் நிலையம் பகுதியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது .கேத்தி பேரூராட்சி அதிமுக செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்சஸ் சந்திரன், அர்ஜூனன் , கண்ணபிரான் ராஜு உள்பட பலர் பங்கேற்றனர் . தமிழக அரசின் மின் கட்டணம் , சொத்து வரி மற்றும் பத்திர பதிவு உயர்வை கண்டித்து தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டடது.
தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமையச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி கூடலூரில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, கன்னியாகுமரி, செங்கோட்டை பகுதிகளுக்கு சொகுசு பஸ்கள் இயக்க பட்டு வருகிறது. இந்த பஸ்களை படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய பஸ்களாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கூடலூர் – சென்னை இடையே படுக்கை நேற்று சொகுசு பஸ் துவங்கியது பயணிகளை மகிழச்சி அடைய செய்து உள்ளது.
கோத்தகிரி சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பந்தலூர் இண்டகரல் பிளான்டேஷன் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகிய தொழிற்சங்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சர், டேன் டீ நிர்வாக இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில், டேன் டீ தொழிலாளர்களுக்கு 2024 வருடத்திற்கான போனஸ் தொகையை 20 சதவீதமாக அறிவித்து வரும் 20 ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.