Thenilgiris

News May 4, 2024

குன்னூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை இல்லை

image

குன்னூர் நகரத்திற்கு கோடை கால சீசனில் அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க  ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை பயன்படுத்துகின்றனர். வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை வணிகர் தினத்தை விடுமுறை இன்றி கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை குன்னூர் வியாபாரிகள் பொதுநல சங்க செயலாளர் எம்.ஏ.ரகீம் தெரிவித்தார்.

News May 4, 2024

கோடை மழையால் குஷியில் நீலகிரி

image

வெயில் தாங்காமல் ஊட்டிக்கு வருகிறார்கள் சுற்றுலா பயணிகள். ஆனால், ஊட்டியிலேயே வெயில் கொளுத்துவது அதிர்ச்சியை. தந்தது.
இந்த நிலையில் திடீரென காலநிலை மாற்றம் ஏற்பட்டு வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து, மழை சடசடவென கொட்ட தொடங்கியது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக இந்த மழைப்பொழிவு நீடித்தது. குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.

News May 4, 2024

ஊட்டி மலர் கண்காட்சி கட்டணம் உயர்வு

image

ஊட்டி பூங்காவில் 126வது மலர் கண்காட்சி மே 10ல் தொடங்குகிறது. கடந்த ஆண்டு கண்காட்சியை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு பெரியவர்களுக்கு ரூ.150, சிறுவர்களுக்கு ரூ.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News May 4, 2024

கட்டுக்குள் வந்தது வனத்தீ

image

முதுமலை, மசினகுடி சிங்கார வனப்பகுதியில் ஏற்பட்ட வனத்தீ மூன்று நாட்களுக்கு பின் கட்டுப்படுத்தப்பட்டது. நேற்று, காலை வனத்தீ  ஏற்பட்ட பகுதிகளில் வன ஊழியர்கள் தண்ணீர் கேன்களுடன் ஆய்வு செய்து, மரங்களில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில்‌, தீ ஏற்பட்ட பகுதியில் கடுமையான வறட்சி மற்றும் சரிவான மலைப்பகுதி என்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது என்றனர்.

News May 4, 2024

ஆம்புலன்ஸ், சமூக ஆர்வலருக்கு பாராட்டு

image

ஊட்டியிலிருந்து கோத்தகிரி வழியாக வந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த சுற்றுலா வாகனம் குஞ்சப்பனை காட்சிமுனை அருகே பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் சிறுவர், சிறுமியர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 பேர் பயணித்தனர். காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்/ சமூக ஆர்வலர்கள் விரைந்து செயல்பட்டது அனைவரது பாராட்டுதலையும் பெற்றது.

News May 3, 2024

நீலகிரி மாவட்டத்தில் மழை

image

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படிஇரவு 10 மணி வரை நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 3, 2024

ஊட்டிக்கு நாளை முதல் 25 கூடுதல் பஸ்

image

அக்கினி வெயில் நாளை காலை 9.30 க்கு தொடங்குகிறது. இதை தொடர்ந்து, மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள கோத்தகிரி, கோடநாடு, குன்னூர், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகின்றனர். இதனால், ஏற்கனவே இருக்கும் வழித்தட பேருந்துகள் போதியதாக இல்லை. இதை கருத்தில் கொண்ட மாநில போக்குவரத்து துறை கோவையில் இருந்து நாளை முதல் 25 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 3, 2024

யாருக்கெல்லாம் இ – பாஸ் தேவை இல்லை

image

வருகிற மே7 ம் தேதி முதல் நீலகிரி செல்ல இ – பாஸ் கட்டாயம் என அரசு அறிவித்து உள்ள நிலையில், யாருக்கெல்லாம் இ-பாஸ் தேவையில்லை என்பது குறித்து வட்டார போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளி மாவட்ட பதிவு எண் கொண்டு நீலகிரியில் பயன் படுத்தி வரும் வாகனம், மற்றும் நீலகிரி பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு இ பாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

நீலகிரி சிம்ஸ் பூங்கா சிறப்புகள்!

image

குன்னூரில் உள்ள தாவரவியல் பூங்கா, 12 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. இதை ஜே.டி. சிம்ஸ் மற்றும் மேஜர் முர்ரே ஆகியோரால் 1874 துவக்கப்பட்டதாகும். இதில் இயற்கையாக மரங்கள், செடிகள், புதர்கள் வளர்க்கப்பட்டன. அதனுடன் இப்பூங்காவில் உலகம் முழுவதுமிருந்து அரிய வகை தாவரங்களும் கொண்டுவரப்பட்டன. இந்தப் பூங்காவில் 85 குடும்பங்களைச் சேர்ந்த, 1000க்கும் மேற்பட்ட இனத்தாவரங்கள் இங்கு பாதுகாத்துப் பராமரிக்கப்படுகிறது.

News May 3, 2024

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

நீலகிரியில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் மே.7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரியில் இதுவரை இல்லாத அளவு உட்சபட்ட வெப்ப அலையின் தாக்கம் இருந்து வந்த நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.

error: Content is protected !!