India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் ஓவேலி வன சரக பகுதிகளில் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி 3 நாட்கள் நடைபெற்றது . இதில் 10 குழுக்களில் 25 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். மலை முகடுகள், புல்வெளி மலைகள் மற்றும் நீர் நிலைகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் 267 வரையாடுகள் தென்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
நீலகிரிக்கு வருகை தரும் வெளி மாநில, வெளி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நாளை(மே.7) முதல் 30.06.2024 வரை இ பாஸ் பதிவு செய்து வரவேண்டும். <
ஊட்டி சேரிங்கிராஸ் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெங்களூரூ ஜேகே அகாடமி சார்பில் சிலம்ப போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கேரளா, கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த 800 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் திருப்பூர் திருமுருகாற்றுப்படை போர் சிலம்பம் தற்காப்பு கலைகள் பயிற்சி பள்ளியை சேர்ந்த 10 மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிக்கு இரண்டு வெள்ளி பதக்கம். வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் இ-பாஸ் பெறுவதற்கு epass.tnega.org என்ற இணையதள முகவரியில் மே 6ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். qR code பயன்படுத்தலாம். இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு அருணா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் உதகை தட்சிணாமூர்த்தி திருமடம் மடாதிபதி தெரிவித்த தகவல்:-
உதகை, காந்தல் காசி விசுவநாதர் திருக்கோயிலுக்கு ஆகம விதிகளின்படி பயிற்சி பெற்ற இரண்டு அர்ச்சகர்கள் , இரண்டு பெண் துப்புறவு பணியாளர்கள் மற்றும் ஒரு இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 03.06.2024 என்று கூறப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ‘தமிழ்நாடு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 2024’ குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் இன்று கூறுகையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்படுகிறது. காலை 9.30 மணிக்கு, +2 பொது தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை https://WWW. dge.tn.nic.in/ இணைய தளத்தில் இருந்து சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
கோவை சேர்ந்த நண்பர்கள் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா தலங்களை கண்டுகளித்து விட்டு நேற்று கோத்தகிரி அருகே தந்தநாடு பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த அவர்கள் நேற்று மதியம் 2 மணி அளவில் ஆடத்தோரை நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. இடி சத்தம் காரணமாக செங் குளவி கூடு கலைந்து 2 பேரை கடித்ததில் இருவர் பலியாகினர்.
நேற்று முன்தினம் இரவு முதுமலையிலிருந்து தொரப்பள்ளிக்குள் நுழைந்த காட்டு யானை காலையில் மைசூரு சாலையில் நுழைந்து முதுமலை நோக்கி சென்றது. இதை பார்த்த தெரு நாய் பின் தொடர்ந்து விரட்டியது. யானை அச்சத்துடன் சாலையில் ஆக்ரோஷமாக ஓடி தொரப்பள்ளி வன சோதனையை கடந்து முதுமலைக்குள் சென்றது. இந்நிலையில், யானையை தெருநாய் விரட்டி சென்றதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் கால்பந்து கழகம் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்ற நடைபெற்ற மாவட்ட அளவிலான ‘பி. டிவிஷன் பிரிவு கால்பந்து போட்டியில் கோத்தகிரி ரிவர்சைடு கால்பந்து அணி மற்றும் கூடலூர் பிதர்காடு கால் பந்து அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிதர்காடு கால் பந்து அணி 2-0 என்கிற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
கோவையை சேர்ந்த ராஜசேகர், கார்த்திகேயன் உள்ளிட்ட 7 பேர் கோத்தகிரி பக்கம் ஹாடதொரை பகுதிக்கு இன்று சென்று உள்ளனர். அங்கு கூடு கட்டியிருந்த குளவிகள் இவர்களை துரத்தி கடித்து உள்ளது. இதில் ராஜசேகர், கார்த்திகேயன் ஆகியோர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 7 பேர் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.