Thenilgiris

News October 8, 2024

கூடலூர் டூ சென்னை சொகுசு பஸ் இயக்கம்

image

நீலகிரி கூடலூரில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, கன்னியாகுமரி, செங்கோட்டை பகுதிகளுக்கு சொகுசு பஸ்கள் இயக்க பட்டு வருகிறது. இந்த பஸ்களை படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய பஸ்களாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கூடலூர் – சென்னை இடையே படுக்கை நேற்று சொகுசு பஸ் துவங்கியது பயணிகளை மகிழச்சி அடைய செய்து உள்ளது.

News October 8, 2024

20% போனஸ் வழங்க கோரிக்கை

image

கோத்தகிரி சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பந்தலூர் இண்டகரல் பிளான்டேஷன் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகிய தொழிற்சங்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சர், டேன் டீ நிர்வாக இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில், டேன் டீ தொழிலாளர்களுக்கு 2024 வருடத்திற்கான போனஸ் தொகையை 20 சதவீதமாக அறிவித்து வரும் 20 ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

சேரம்பாடியில் கஞ்சா வைத்த ஆசாமி கைது

image

சேரம்பாடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் துரைபாண்டி வழக்கமான ரோந்து பணியில் நேற்று கொளப்பள்ளி ஆட்டோ நிறுத்தம் பகுதியில் ஈடுபட்டபோது சந்தேகம் படும் படியாக நின்றிருந்தவரை சோதனையிட்டார். இதில், அவர் கொளப்பள்ளியை சேர்ந்த சசிகுமார் (44) என்றும், விற்பனைக்கு கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. அவரிடம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தார்.

News October 7, 2024

காட்டு யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு

image

நீலகிரி: கோத்தகிரி அருகே கெங்கரை சிவகிரிநகரை சேர்ந்தவர் விஜயராஜ் (34). இவர் நேற்று மாலை யானை தாக்கியதில் படுகாயமடைந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 6, 2024

கூடலூரில் இருந்து சென்னைக்கு சொகுசு பேருந்து இயக்கம்

image

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து சேவை இன்று முதல் துவங்கப்பட்டது. கூடலூரிலிருந்து சென்னைக்கு தினமும் பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News October 5, 2024

கூடலூர் பகுதியில் இரண்டு லாரிகள் மோதல்

image

நீலகிரி மாவட்டம்  , கூடலூர் அருகே  நாடுகானி என்ற இடத்தில் இருந்து வழிக்கடவு  செல்லும் நெடுஞ்சாலை உள்ளது . அந்த சாலையில் இன்று  மாலை 3 மணி அளவில் இரண்டு லாரிகள் நேர் எதிரே மோதியது . அதனால் தமிழ்நாடு , கேரளா மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து தடைப்பட்டது . காவல் துறையினர்  போக்குவரத்தை  ஒழுங்கு படுத்தினார்கள். 

News October 5, 2024

பள்ளி மாணவர்களுக்கான வண்ண ஓவிய போட்டி

image

நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் Police Commemoration Day அக்டோபர் 21 தேதி நடைபெறுகிறது. அதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான வண்ண ஓவிய போட்டி நடத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான போட்டியில் கலந்துகொள்ள அக்டோபர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News October 5, 2024

நீலகிரி: 33 புதிய வகை ஊர்வனங்கள் கண்டுபிடிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் 33 புதிய வகை ஊர்வனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீகூர், சிங்காரா, தெங்குமரகடா பகுதிகளில் 36 புதிய நீர், நிலங்களில் வாழும் உயிரினங்களும் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த வல்லுனர் குழுவினர் 3 நாட்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பின்போது பார்த்துள்ளனர். புதிய உயிரினங்களில் 16 வகை உயிரினங்கள் அழிவின் பட்டியலில் உள்ளன.

News October 5, 2024

நீலகிரி கல்லுாரி அணி அசத்தல்

image

நீலகிரி: பந்தலுார் அருகே தாளூரில் உள்ள நீலகிரி கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில், பாரதியார் பல்கலைக்கழக கல்லுாரி மாணவர்களுக்கு இடையிலான ‘ஏ’ பிரிவு கால்பந்து போட்டி நடந்தது. அதில் நீலகிரி, கோவை கல்லுாரிகளை சேர்ந்த 22 அணி வீரர்கள் விளையாடின. இறுதி போட்டியில், கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி – நீலகிரி கலை அறிவியல் கல்லுாரி அணி மாணவர்கள் விளையாடினர். 3 கோல்கள் அடித்து நீலகிரி அணி முதல் இடம் பிடித்தது.

News October 4, 2024

நீலகிரி மாவட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

image

நீலகிரி மாவட்ட இஸ்லாமிய மக்களின் காஜியின் பதவி காலம் வரும் 13ஆம் தேதி நிறைவடைகிறது. புதிய காஜியை தேர்வு செய்ய முஸ்லிம் சமுதாயத்திற்கு சேவை செய்து உழைத்த உலமாக்கள் 2 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உள்ள உலமாக்கள் புகைப்படத்துடன் கூடிய சுய விபரங்கள் மற்றும் கல்வி சான்றிதழுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!