India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பீட்ரூட், கோஸ், போன்ற காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. நடப்பாண்டு போதிய மழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டு பயிரிட்டுள்ள காய்கறிகளுக்கு தண்ணீர் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் பயிரிட்ட உருளைக்கிழங்கை அறுவடை செய்துவருகின்றனர். ஆனால் உருளைக்கிழங்கு பச்சை வெட்டு, சரியான வளர்ச்சி இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்பதிவு செய்து தங்கும் விடுதிகளில் தங்கி வருகிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விடுதி ரசீதில் ‘இ-பாஸ் கட்டாயம்’ என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் சுட்டெரித்து வந்தாலும், சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வரும் மே.16 அன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த உதகையில் தற்போது 126 மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் 80 ஆயிரம் கொய் மலர்களைக் கொண்டு 33 அடி நீளம், 25 அடி அகலம், 20 உயரத்தில் யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயில் சப்தம் வரும் வகையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல ரகங்களில் லட்சக்கணக்கான மலர்ச் செடிகள் மலர் மாடங்களை அலங்கரித்திருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் தமிழக வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் இரண்டு முறை வனவிலங்குகள்,பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு நீலகிரி வனப்பகுதியில் கணக்கெடுப்பின்போது 128 வகைகளை சேர்ந்த 5110 பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, மரப்பாலம் அருகே 13ஆவது கொண்டை ஊசி வளைவில் ஒரு பிக்கப் லாரி ஆக்ஸல் உடைந்து நடு ரோட்டில் நின்றது. அதை கடந்து செல்ல முயன்ற அரசு பேருந்தும் வளைவில் சிக்கியது. இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பிக்கப் லாரியில் இருந்த பொருட்களை இறக்கப்பட்டது. இதையடுத்து பேருந்து பயணிகள் லாரியை தள்ளி நிறுத்திய பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே.11) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
நீலகிரியில், மழைக்கு பின்பு சீதோஷ்ண நிலை, அனுபவிக்கும் படியாக மாறியுள்ளது. இது சுற்றுலா மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் இயற்கை அழகை ரசிக்க செல்பவர்கள் படகு சவாரி செய்ய பைக்கரா படகு இல்லம் செல்கின்றனர். ஆனால் பராமரிப்பு பணி காரணமாக அது மூடப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.