India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்
( மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் நீலகிரி மாவட்டம் 24 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 84.78% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.13 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 88.55 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் மாணவர்கள் 87.69% பேரும், மாணவியர் 94.58% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 91.37% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 18வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட கட்டுமான விதிமீறல்களால் பலர் பலியாகி உள்ளனர். 2017 ஜூன் 10ம் தேதி சி.எம்.எஸ் பகுதியில் ஒருவர், கடந்த பிப் 6ம் தேதி ஊட்டி லவ்டுடே அருகே 6 பேர், 2024 மார்ச் 13ம் தேதி ஊட்டி பாப்சா லைனில் இருவர், கடந்த 6ம் தேதி வெலிங்டன் பகுதியில் ஒருவர் என மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர் எனினும் விதிமீறல்கள் தொடர்ந்து வருகின்றன.
டால்பின் நோஸ் சுற்றுலா பர்லியார் ஊராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு இருசக்கர வாகனம் ரூ.20, நான்கு சக்கர வாகனம் ரூ.30, வேன், பஸ் ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. கட்டண கொள்ளையில் ஈடுபட்டதால் கடந்த மாதம் கலெக்டர் உத்தரவின்பேரில் கட்டண விவர அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டார். தற்போது காற்றில் பறந்தது கலெக்டரின் உத்தரவு. மீண்டும் பார்க்கிங் கட்டண கொள்ளை.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் பசுமை வீரர்கள் அமைப்பு மூலம் 6 நெகிழி விழிப்புணர்வு பிரச்சார இருசக்கர வாகனங்களை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.05.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (பொறுப்பு) திரு. ரவிச்சந்திரன் உட்பட பலர் உள்ளனர்.
நீலகிரியில், நேற்று (மே.12) மழைப்பொழிவு பதிவான விவரத்தை, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பார்வூட் பகுதியில் 5 செ.மீட்டரும், நடுவட்டம், தேவாலா, பர்லியார், கிளன்மார்கன், கீழ்கோத்தகிரி எஸ்டேட், குன்னூர் PTO ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவு நீலகிரியில் வெப்பநிலை இருந்துவந்த நிலையில், சமீபகாலமாக ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் ( இன்று இரவு 7 மணி வரை ) நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கட்டபெட்டு, அரவேனு கூக்கல்தொறை அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர். சாரல் மழையால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பீட்ரூட், கோஸ், போன்ற காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. நடப்பாண்டு போதிய மழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டு பயிரிட்டுள்ள காய்கறிகளுக்கு தண்ணீர் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் பயிரிட்ட உருளைக்கிழங்கை அறுவடை செய்துவருகின்றனர். ஆனால் உருளைக்கிழங்கு பச்சை வெட்டு, சரியான வளர்ச்சி இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.