Thenilgiris

News May 19, 2024

உதகை மலர் கண்காட்சி: 14 ஆயிரம் பேர் வருகை

image

உதகை அரசு பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நேற்று 8 வது நாளாக நடைபெற்றது . சுற்றுலா பயணிகள்   கூட்டமாக முதல்காட்சியை பார்வையிட்ட நிலையில் பகல் 11 மணியளவில் தொடங்கிய மழை 2 மணிவரை நீடித்தது. இந்த சூழ்நிலையில் மாலை வரை சுற்றுலா பயணிகள்
14 ஆயிரத்து 550 பேர் மலர் கண்காட்சியை பார்வையிட்டார்கள் என்று பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

News May 19, 2024

நீலகிரியில் தொடர் மழை – நீர்வரத்து உயர்வு

image

இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நீலகிரியில் குந்தா பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், அப்பர்பவானி , குந்தா, கெத்தை, பில்லுார், அவலஆஞ்சஇ , எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து
உள்ளிட்ட, 12 அணைகள், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. மழையால் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, அணைகளில், 8 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

News May 19, 2024

நீலகிரியில் கொட்டி தீர்த்த மழை

image

நீலகிரி மாவட்டத்தில், கடந்த, 4ம் தேதி முதல் மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.
நேற்று ஊட்டி குன்னுார் கூடலூரில் கன மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களில், 15 செ.மீ. மழை பெய்துள்ளது. கோத்தகிரி அதன் சுற்று வட்டார எம். கைகாட்டி பகுதிகளில், ராட்சத மரம் சாலையில் விழுந்து ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News May 18, 2024

நீலகிரி மலை ரயில் மேலும் 2 நாட்கள் ரத்து

image

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் ரோடு அடர்லி ரயில் நிலையம் அருகே நேற்று இரவு பெய்த பலத்த மழையில் மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்து, மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. அதனால் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு உதகைக்கு புறப்பட வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மேலும் 2 நாட்களுக்கு மலை ரயில் ரத்து செய்யப்படுகிறது.

News May 18, 2024

நீலகிரிக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்

image

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை (மே.19) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

எழுத்தறிவு திட்ட பிரச்சாரம்

image

கூடலூர் தேவர்சோலை அருகே பாவனாநகர் பகுதியில எடலமூலா, குட்டமங்கலம் ஆகிய கிராமங்கள் உள்ளது . அங்கு அரசு தொடக்க பள்ளி  தலைமையாசிரியர் பங்கஜம், இல்லம் தேடி கல்வி பயிற்றுநர் காஞ்சனா ஆகியோர் இன்று எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கற்போரை சேர்க்க வீடு, வீடாக  பிரச்சாரம் செய்தனர். அதன் பயனாக மாலதி, லீலா , அங்கம்மாள்  ஸ்ரீஜா , நிஷா ,கிரிஷ் , செம்பன்   ஆகியோர் முதியோர் கல்வி பயில முன்வந்தனர்.

News May 18, 2024

நீலகிரியில் 17 செ.மீ மழைப்பதிவு

image

நீலகிரியில் நேற்று (மே.18) பெய்த மழைஅளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குன்னூர் பகுதியில் 17 செ.மீட்டரும், குன்னூர் PTO பகுதியில் 14 செ.மீட்டரும், கீழ் கோத்தகிரி, பர்லியார் ஆகிய பகுதிகளில் 8 செ.மீட்டரும், ஆலக்கரை எஸ்டேட், பந்தலூர் தாலுகா அலுவலகம் ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும், அடார் எஸ்டேட், கோத்தகிரி, கின்னக்கோரை, தேவாலா ஆகிய பகுதிகளில் 6 செ.மீட்டரும் பதிவானது.

News May 18, 2024

நீலகிரி மலை ரயில் ரத்து: தண்டவாளத்தில் விழுந்த பாறைகள்

image

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் ரோடு அடர்லி ரயில் நிலையம் அருகே  நேற்று இரவு பெய்த பலத்த மழையில் மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன, மண் சரிவும்  ஏற்பட்டுள்ளது. அதனால் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு உதகைக்கு புறப்பட்ட மலை ரயில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் கோட்டம் ரயில்வே அறிவித்துள்ளது.

News May 18, 2024

நீலகிரி மலை ரயில் ரத்து: தண்டவாளத்தில் விழுந்த பாறைகள்

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் ரோடு அடர்லி ரயில் நிலையம் அருகே  நேற்று இரவு பெய்த பலத்த மழையில் மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன, மண் சரிவும்  ஏற்பட்டுள்ளது. அதனால் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து 7.10 மணிக்கு உதகைக்கு புறப்பட்ட மலை ரயில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் கோட்டம் ரயில்வே அறிவித்துள்ளது.

News May 18, 2024

நீலகிரி: சீல் வைத்து ரூ.1,25,000 அபராதம்

image

ஊட்டியில் தடை செய்யப்பட்ட நிக்கோடின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சுரேஷுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நகரில் நடந்த சோதனையில், புகையிலை வைத்திருந்த கடைகளுக்கு நேற்று (மே 17) சீல் வைத்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

error: Content is protected !!