India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து, நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. இந்நிலையில், தற்போதைய தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள குந்தா உள்ளிட்ட அனைத்து அணைகள் மற்றும் குடிநீர் தடுப்பு அணைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் நடப்பாண்டு குடிநீர் பிரச்சனை ஏற்படாது என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலக புகழ்பெற்ற இயற்கையில் சிறந்த சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை விழா மே 10ஆம் தேதி தொடங்கி மே 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவித்திருக்கிறது. எனவே நாளை முதல் 3 நாள்கள் (மே 18, 19, 20) நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கிட்டத்தட்ட நிறைவுபெறும் சூழலில் உள்ளது. இந்நிலையில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும் நிலையில் அன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்கள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அருணா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து நீலகிரியில் வறட்சி நிலவியது. இதனால் வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி கிராம பகுதிகளில் நுழைந்தன. விவசாய பயிர்களைச் சேதப்படுத்தின. மனித-விலங்கு மோதல்கள் ஏற்பட்டுவந்தன. இந்த நிலையில் சமீபத்திய மழை பொழிவால் வனப்பகுதிகள் பசுமைக்குத் திரும்பி வருகின்றன. இதனால் வனத்தீ அபாயம் முடிவுக்கு வந்ததாக வன ஊழியர்கள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா நிலாகோட்டை ஊராட்சிக்குட்பட்ட ராக்வுட் எஸ்டேட் பகுதியில் நேற்றிரவு 8 மணி அளவில் மணிகண்டன் என்பவரை யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடை விழா என்றாலே கோத்தகிரி, ஊட்டி, குன்னூர், கூடலூரில் உள்ள பூங்காக்களில் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு உதகையில் மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறுகிறது. இ-பாஸ், தங்கும் விடுதி, கட்டணம் உயர்வு, முறையான பார்க்கிங் வசதி உள்பட எந்த வசதிகளும் செய்யாத காரணத்தால் இந்தாண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
நீலகிரியில் பெய்து வரும் மழையால் தேயிலை கொழுந்துகள் செழித்து வளர தொடங்கி உள்ளன. இதனால் அனைத்து இடங்களிலும் மகசூல் அதிகரித்து உள்ளது. எனவே, தேயிலை பறிப்புக்கு தொழிலாளர் கிடைப்பதில் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பணியின்போது மழை பெய்தால், பாதியிலேயே தொழிலாளர்கள் மழைக்கு ஒதுங்க சென்று விடுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குன்னூர் கிளப் ரோடு பகுதியில் ஒரு பங்களா வளாகத்தினுள் கடந்த 14ஆம் தேதி ஒரு கரடி புகுந்தது. குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் குழுவினர் கரடியை விரட்டுதல் அல்லது கூண்டில் பிடிப்பது என பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மழை பெய்வதால் கரடி அங்கும் இங்கும் ஓடி வனத்துறைக்கு போக்கு காட்டுகிறது. அதனால் அந்தப் பகுதியில் யாரும் தனியாக போக வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
நீலகிரியில் மலை காய்கறிகள் தமிழகம் உட்பட கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில்
நடப்பாண்டில் ஏப். இறுதி வரை மழை பெய்யவில்லை. இந்த மாதம் மே 4ம் தேதி துவங்கிய கோடை மழை மாவட்ட முழுவதும் அவ்வப்போது பெய்தது நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 12.69 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தற்போது
விவசாயத்திற்காக தங்கள் நிலங்களை தயார் செய்யும் பணியில் மலை மாவட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.