India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி, 1899 ஜூன் 15இல் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில், 1909 அக்டோபர் 15 முதல் குன்னூரில் இருந்து ஊட்டி வரை நீட்டிக்கபட்டது. இந்த தினம் ஆண்டுதோறும் நீலகிரி மலை ரயில் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று ஊட்டி ரயில் நிலையத்தில் 116ஆவது ரயில் தினம் கொண்டாடப்படுகிறது.
நீலகிரி எஸ்பி என்.எஸ்.நிஷா அறிக்கையில் ‘மாவட்ட ஊர்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு (25.9.24)க்குள் விண்ணப்பிக்க கோரப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதன் கால அவகாசம் (31.10.24) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி பட்டப்படிப்பு (அ) அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 50 ஆகும். விண்ணப்பங்கள் மாவட்ட எஸ்பி,க்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உதகையில் தனியார் ஓட்டலுக்கு இன்று காலை இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு போலீசார் மோப்ப நாயுடன் விரைந்து சென்று தீவிர சோதனை செய்கின்றனர். மேலும் தொட்டபெட்டா அருகே சிங்க்லர் ஓட்டல், ஐலேண்டு அக்கார்டு மற்றும் பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் வெடிகுண்டு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2 தனியார் பள்ளிகளுக்கும், தனியார் விடுதிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாள்களாக தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. உதகையில் 15ஆம் தேதி அரசு மேல்நிலை பள்ளி, குன்னூரில் 16ஆம் தேதி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி, கோத்தகிரியில் 17ஆம் தேதி அரசு மேல்நிலை பள்ளி, கூடலூரில் 18ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.
கோத்தகிரியை அடுத்த கெங்கரை பகுதியை ஒட்டிய வன பகுதிகளில் பழங்குடி மக்களின் கிராமங்கள் அமைந்து உள்ளன. இந்த பகுதியில் கடந்த வாரத்தில் யானை தாக்கியதில் இருவர் இறந்தனர். இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள செம்மனாரை வனப்பகுதியில் எஸ்.பி நிஷா திடீரென கள்ளச்சாராய சோதனை மேற்கொண்டார். மேலும் அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதி 5 மாத வயதுடைய புலி குட்டி உயிரிழந்து கிடந்தது. இது குறித்த தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் கவுதம், வனசரகர் செல்வராஜ் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் புலி குட்டியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த பின் அதன் உடல் எரியூட்டபட்டது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 25 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அதிகாரி இந்திரா தொடங்கி வைத்தார். இவ்விழாவில் குன்னூர் நகர இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் திமுக உறுப்பினர் சையது மன்சூர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
இந்திய செஞ்சிலுவை சங்க நீலகிரி மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் நவம்பர் 6ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். அப்போது நீலகிரி மாவட்ட கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறும். இந்திய செஞ்சிலுவை சங்க நீலகிரி மாவட்ட கிளை உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் பங்கேற்கலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.