India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் அமைந்துள்ள முகாம்களில் குட்டி யானைகள், கும்கி யானைகள், ஓய்வு பெற்ற யானைகள் உள்ளிட்ட 30 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வனத்துறை சார்பில் இவற்றுக்கு காலை, மாலை சமைத்த சோறு, ராகி, கொள்ளு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. பிற நேரங்களில் யானைகள் வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள அறிக்கையில், வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை(ஆக.13) வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நிலகிரி மக்களே.., தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ‘<
நீலகிரி மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’தையல்’ பயிற்சி நீலகிரியில் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வரும் செப்.1ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு 8th முடித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 9781 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
நீலகிரி மாவட்டத்தில் இன்று (11.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை செயிண்ட் மேரீஸ்ஹில் ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில், உறுதிமொழி ஏற்கப்பட்டது பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், சுய உதவிக்குழுவினருக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.
நீலகிரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
கூடலூர் அடுத்து ஓவேலி பேரூராட்சி நியோப் பகுதியை சேர்ந்த விவசாயி மணி என்பவரை, யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார், இந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானையால் தொடர்ந்து மனித உயிர் இழப்புகள் ஏற்படுவதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
தமிழக முதல்வர் தலைமையில் இன்று போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு ஊட்டி ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காணொளி வாயிலாக பள்ளி மாணவ, மாணவியருக்கு காட்டப்படுகிறது. போதைப் பொருளுக்கு எதிராக பொதுமக்கள் https://www.drugfreetamilnadu.tn.gov.in/enpledge முகவரியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
‘உங்கள் சேவையில்’ வாட்ஸ்ஆப் எண் : 9943126000
மாவட்ட கட்டுப்பாட்டு அறை : 1077
காவல் கட்டுப்பாட்டு அறை : 100
விபத்து உதவி எண் : 108
தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு : 101
குழந்தைகள் பாதுகாப்பு : 1098
பேரிடர் கால உதவிக்கு : 1077
மாநில கட்டுப்பாட்டு அறை: 1070
உடனே இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.