Thenilgiris

News May 18, 2024

நீலகிரியில் 17 செ.மீ மழைப்பதிவு

image

நீலகிரியில் நேற்று (மே.18) பெய்த மழைஅளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குன்னூர் பகுதியில் 17 செ.மீட்டரும், குன்னூர் PTO பகுதியில் 14 செ.மீட்டரும், கீழ் கோத்தகிரி, பர்லியார் ஆகிய பகுதிகளில் 8 செ.மீட்டரும், ஆலக்கரை எஸ்டேட், பந்தலூர் தாலுகா அலுவலகம் ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும், அடார் எஸ்டேட், கோத்தகிரி, கின்னக்கோரை, தேவாலா ஆகிய பகுதிகளில் 6 செ.மீட்டரும் பதிவானது.

News May 18, 2024

நீலகிரி மலை ரயில் ரத்து: தண்டவாளத்தில் விழுந்த பாறைகள்

image

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் ரோடு அடர்லி ரயில் நிலையம் அருகே  நேற்று இரவு பெய்த பலத்த மழையில் மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன, மண் சரிவும்  ஏற்பட்டுள்ளது. அதனால் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு உதகைக்கு புறப்பட்ட மலை ரயில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் கோட்டம் ரயில்வே அறிவித்துள்ளது.

News May 18, 2024

நீலகிரி மலை ரயில் ரத்து: தண்டவாளத்தில் விழுந்த பாறைகள்

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் ரோடு அடர்லி ரயில் நிலையம் அருகே  நேற்று இரவு பெய்த பலத்த மழையில் மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன, மண் சரிவும்  ஏற்பட்டுள்ளது. அதனால் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து 7.10 மணிக்கு உதகைக்கு புறப்பட்ட மலை ரயில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் கோட்டம் ரயில்வே அறிவித்துள்ளது.

News May 18, 2024

நீலகிரி: சீல் வைத்து ரூ.1,25,000 அபராதம்

image

ஊட்டியில் தடை செய்யப்பட்ட நிக்கோடின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சுரேஷுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நகரில் நடந்த சோதனையில், புகையிலை வைத்திருந்த கடைகளுக்கு நேற்று (மே 17) சீல் வைத்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

News May 18, 2024

தென்மேற்கு பருவமழை: 456 நிவாரண முகாம்கள் தயார்

image

நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவமழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன அப்பகுதிகளில் 42 மண்டல குழுக்கள் கொண்ட அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டு பாதிக்கப்படும் பகுதியில் உள்ள பொதுமக்களை தங்க வைக்க ஏதுவாக 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 18, 2024

நீலகிரியில் சிறப்பு ரயில் சோதனை ஓட்டம்

image

நீலகிரியில் இயங்கும் யுனெஸ்கோ புகழ், பல்சக்கர ரயிலில் பயணம் செய்ய பல்வேறு தரப்பு மக்களும் ஆர்வம் காட்டி வந்தனர். இதை கருத்தில்கொண்டு வாரத்தில் 4 நாட்கள் ஓடிய சிறப்பு ரயிலை தினமும் விட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று (மே 17) சோதனை ஓட்டமாக 3 பெட்டிகளுடன் ரன்னிமேடு ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது.

News May 17, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கூட்டம் இன்று (17 தேதி ) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி மு .அருணா தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி கல்பனா அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, மகளிர் திட்ட இயக்குனர் காசிநாதன் உள்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News May 17, 2024

ஜூன் 7 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

image

நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.களில் 2024ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு வரும் ஜூன் 7ம் தேதி வரை 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் www.skiltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை
என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News May 17, 2024

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மீட்பு படை

image

நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடம் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.

News May 17, 2024

நீலகிரி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை நீலகிரியில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!