India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்றுவரும் 19வது ரோஜா கண்காட்சி நேற்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியால் மேலும் 3 நாட்களுக்கு ரோஜா கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் பலா பழம் சீசன் காரணமாக யானைகள் கூட்டமாக வந்து பழங்களை சுவைகின்றன. தற்போது இப்பாதை ஒருவழி பாதையாக உள்ளதால் நடமாட சிரமம் இல்லாமல் உள்ள நிலையில் இன்று மதியம் பிறந்து ஒரு வாரமே ஆன தனது குட்டியை அரவணைத்து சாலையை யானைகள் கூட்டம் கடந்து செல்கின்றன. எனவே பாதுகாப்பு கருதி வனசரகர் தலைமையிலான குழு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே அடர்லி ரெயில் நிலையம் அருகே 17ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழையில் மலை ரெயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தது. மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 18ஆம் தேதி மேட்டுப்பாளையம் , இடையே மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மூன்று தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் உள்ளதால் 20ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்வதாக சேலம் கோட்டம் ரயில்வே தெரிவித்துள்ளது.
கூடலூர் அருகே தொரைப்பள்ளியில் உள்ள ஆற்றில் நேற்று (மே.17) மதியம் முதலை ஒன்று தென்பட்டது. இதை கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் ஆற்றில் முதலை இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் பொது மக்களிடம் ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால் அந்த பக்கம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.
உதகை அரசு பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நேற்று 8 வது நாளாக நடைபெற்றது . சுற்றுலா பயணிகள் கூட்டமாக முதல்காட்சியை பார்வையிட்ட நிலையில் பகல் 11 மணியளவில் தொடங்கிய மழை 2 மணிவரை நீடித்தது. இந்த சூழ்நிலையில் மாலை வரை சுற்றுலா பயணிகள்
14 ஆயிரத்து 550 பேர் மலர் கண்காட்சியை பார்வையிட்டார்கள் என்று பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நீலகிரியில் குந்தா பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், அப்பர்பவானி , குந்தா, கெத்தை, பில்லுார், அவலஆஞ்சஇ , எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து
உள்ளிட்ட, 12 அணைகள், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. மழையால் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, அணைகளில், 8 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த, 4ம் தேதி முதல் மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.
நேற்று ஊட்டி குன்னுார் கூடலூரில் கன மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களில், 15 செ.மீ. மழை பெய்துள்ளது. கோத்தகிரி அதன் சுற்று வட்டார எம். கைகாட்டி பகுதிகளில், ராட்சத மரம் சாலையில் விழுந்து ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் ரோடு அடர்லி ரயில் நிலையம் அருகே நேற்று இரவு பெய்த பலத்த மழையில் மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்து, மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. அதனால் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு உதகைக்கு புறப்பட வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மேலும் 2 நாட்களுக்கு மலை ரயில் ரத்து செய்யப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை (மே.19) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கூடலூர் தேவர்சோலை அருகே பாவனாநகர் பகுதியில எடலமூலா, குட்டமங்கலம் ஆகிய கிராமங்கள் உள்ளது . அங்கு அரசு தொடக்க பள்ளி தலைமையாசிரியர் பங்கஜம், இல்லம் தேடி கல்வி பயிற்றுநர் காஞ்சனா ஆகியோர் இன்று எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கற்போரை சேர்க்க வீடு, வீடாக பிரச்சாரம் செய்தனர். அதன் பயனாக மாலதி, லீலா , அங்கம்மாள் ஸ்ரீஜா , நிஷா ,கிரிஷ் , செம்பன் ஆகியோர் முதியோர் கல்வி பயில முன்வந்தனர்.
Sorry, no posts matched your criteria.